Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 டிசம்பர், 2017

புவியின் மைய அச்சுவரை நீளும் சிவலிங்கம் எங்கே தெரியுமா?

சிவலிங்கம்தான் உலகை ஆட்டிப்படைத்து தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அதிசய ஆற்றல் என்பது ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. 

அப்படி சிவபெருமான் மீது கொண்டுள்ள பற்று அவர் ஆக்கல், அழித்தல் மற்றும் காத்தல் முதலிய தொழில்களைச் செய்வதாக கூறுகின்றனர் பக்தர்கள். 

சிவனின் தொழில்கள் காத்தல், அழித்தல், ஆக்கல் என்பது மட்டுமல்லாது இவ்வுலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கவும் செய்கிறார் சிவபெருமான். 

சிவனின் லிங்கம் பூமியின் மேற்பகுதியிலிருந்து உள்ளே மைய அச்சுவரை நீள்வதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதுவும் இந்தியாவில் உள்ளது அந்த சிவலிங்கம்.  

அது இருக்கும் இடத்துக்கு ஒரு சுற்றுலா செல்லலாம் வாருங்கள்! எங்குள்ளது ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் அமைந்துள்ளது டோல்பூர் எனும் இடம். இங்குதான் உலக சிறப்பு பெற்ற அச்சலேசுவரர் கோயில் அமைந்துள்ளது. 

சிவனின் அதிசயம் இந்த கோயிலின் சிவன் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறமாறுகிறார். அறிவியலா ஆன்மீகமா அறிவியலின்படி சூரிய ஒளி நேரடியாக விழுவதனால்தான் இந்த நிறமாற்றம் நிகழ்வதாக கூறுகின்றனர். 

ன்மீகவாதிகள் அப்படியானால் இரவு நேரத்திலும் நிறமாற்றம் ஏற்படுகிறதே என்கிறார்கள். பாத அச்சு சுற்றி கட்டப்பட்டகோயில் இந்த கோயில் சிவபெருமானின் பாத அச்சைச் சுற்றி கட்டப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சிவன் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறமாறும் சிவன்தான் இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய சிவன் ஆகும். 

இந்த சிவலிங்கம் எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. 














இந்த சிவலிங்கம் முடியும் இடத்தில்தான் நம் பூமியின் அச்சு இருக்கும் என்று நம்பப்படுகிறது. லிங்கத்தின் அடியை காணச் சென்றவர்கள் சில அறிவுடையோர் லிங்கத்தின் அடிமுடியைக் காண குழிவெட்டி பூமியை நோக்கி சென்றனராம். அது தொடர்ந்து நீண்டுகொண்டே இருந்ததால் திரும்பி வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக