Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 டிசம்பர், 2017

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். 

அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர். அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.

ராஜநாகங்களின் தலைநகரம் 


அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.

அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்


அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன. 

அகும்பே மழைக் காடுகள் 

ஆராய்ச்சி நிலையம் அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. 

குளோஸ்-அப்! 

ராஜநாகத்தின் குளோஸ் அப் ஷாட் ஒன்றே ஆளை குளோஸ் செய்துவிடும் போலவே?! 

கூட்லு தீர்த்த அருவி

126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும். 

வைப்பர் 




அகும்பே காடுகளில் காணப்படும் வைப்பர் பாம்பு. 

ஓநேக் அபி அருவி

அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்

குரங்கு 

அகும்பே காடுகளில் காணப்படும் குரங்கு. 

தங்க நிறத் தவளை 

கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும். 

அட்டைகள் அதிகம் 

அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள். 

இராட்சஸ சிலந்தி 

அகும்பே காடுகளில் காணப்படும் இராட்சஸ சிலந்தி.

ஆபத்தான வளைவுகள் 

அகும்பே செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகள் இருக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும். 

கொண்டை ஊசி வளைவுகள் 

கொண்டை ஊசி வளைவுகளிலும் கவனமாக வாகனங்களை செலுத்துவது முக்கியம். 

மணிப்பாலிலிருந்து.... 

உடுப்பி அருகே உள்ள மணிப்பாலிலிருந்து அகும்பே செல்லும் வழி. படம் 

அகும்பே சிகரம் 

தூரத்தில் தெரியும் அகும்பே சிகரம். 


மழைக்காடுகள் செல்லும் வழி


அகும்பேவின் மழைக்காடுகள் செல்லும் வழி. 

அடர்வனம் 

அகும்பே காடுகளின் தோற்றம். 

சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் 

அகும்பேவுக்கு அருகில் உள்ள சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயதில் எடுக்கப்பட்ட கழுகு ஒன்றின் புகைப்படம். 

மழைக்காடுகள் 


 
 மழைக்காடுகளில் குரங்கு ஒன்று மரத்தில் தொங்கும் காட்சி. 


சூரிய அஸ்த்தமனம்

அகும்பேவின் காடுகளிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது அற்புதமான அனுபவம். 

எப்படி அடைவது

பேருந்து

அகும்பேவுக்கு பேருந்து மூலமாக வந்தால் மங்களூர், ஷிமோகா மற்றும் உடுப்பியிலிருந்து 40 நிமிடத்தில் வந்து சேரலாம். அதேபோல் பெங்களூரிலிருந்தும் நிறைய எண்ணிக்கையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அகும்பேவுக்கு இயக்கப்படுகின்றன.



ரயில் நிலையம்


அகும்பேவிலிருந்து உடுப்பி ரயில் நிலையம் 53 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. எனவே பயணிகள் இங்கு வந்த பின் நகராட்சி பேருந்துகளிலேயோ, வாடகை கார்களிலேயோ அகும்பேவை அடையலாம்.

விமான நிலையம்


அகும்பேவிலிருந்து மங்களூரின் பாஜ்பே விமான நிலையம் 93 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு சில மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் பெருநகரங்களுடன் பாஜ்பே விமான நிலையம் இணைக்கப்பட்டிருக்கிறது.


அகும்பே வானிலை


கோடைகாலம்
(ஏப்ரல் மற்றும் மே) : அகும்பேவின் கோடை காலங்களில் 30 முதல் 35 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். எனவே அகும்பேவை சுற்றிப் பார்க்க அதன் வெப்பம் மிகுந்த கோடை காலம் உகந்தது அல்ல.

மழைக்காலம் 

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : தென் இந்தியாவின் 'சீராபுஞ்சி' என்று அழைக்கப்படும் அகும்பே, இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆகையால் அகும்பேவின் மழைக்காடுகளையும், அருவிகளையும் அதன் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் கண்டு கழிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும். 

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : அகும்பேவின் பனிக் காலமான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் பயணிகளுக்கு இதமானதாகவும், களிப்பூட்டும் விதமாகவும் அமையும். இந்த காலங்களில் அகும்பேவின் குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி வரை செல்லும். அதோடு பனிக் காலத்தில் நிலங்கள் நடப்பதற்கு இலகுவாக இருப்பதால் நடைபயணம் செல்ல வசதியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக