Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 6 ஜனவரி, 2018

230 வங்கி மொபைல் ஆப்புகளில் வைரஸ் தக்குதல்.. உஷாரா இருங்க..!

ஆன்டிராய்டு செயலிகளைத் தாக்கும் மால்வேர் ஒன்று எஸ்பிஐ, எச்டிஅப்சி, ஐசிஐசிஐ வங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய வங்கிகள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 232 வங்கி செயலிகளைத் தாக்கியுள்ளது என்று குவிக் ஹீல் லேப்ஸ் தெரிவித்துள்ளது. 

கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான ஆண்டி வைரஸ் மென்பொருள் சேவை வழங்கி வரும் குவிக் ஹீல் நிறுவனம் ஆண்டிராய்டு வங்கி டாஜன் வைரர் ஒன்று 232 வங்கி செயலிகளைத் தாக்கியுள்ளதாகவும் அதில் இந்திய வங்கிகளும் அடங்கும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருடப்படும் தகவல்கள் இந்தப் பாங்கிங் மால்வேர் இணையதள வங்கி சேவையில் உள்நுழைவதற்கான ஐடி மற்றும் பாஸ்வார்டு போன்ற விவரங்களைத் திருடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மால்வேர் கோப்புகள் Android.banker.A9480 என்ற பெயரில் முன்பு இருந்து வந்த மால்வேர் ஆனது தற்போது Android.banker.A2f8a என்ற புதிய வகையில் கண்டறியப்பட்டுள்ளது எனக் குவிக் ஹீல் லெப்ஸ் நிறுவன கூறுகிறது. 

உங்கள் மொபைல் போனில் மால்வேர் இருந்தால் எப்படித் தாக்கும்?

புதிய மால்வேர் ஆனது போலி பிளாஷ் பிலேயர் செயலியாக அண்டிராய்டு செயலிகளைப் பாதித்து வருகிறது என்றும் உலகின் பெரும்பாலான இணையதளங்கள் அடோப் பிளாஷ் செயலியின் உதவியுடன் இயங்கி வருவதால் மால்வேர் உருவாக்குநர்கள் இதனைப் பயன்படுத்தி ஆண்டிராய்டு செயலிகளைத் தாக்கியுள்ளனர் என்று குவிக் ஹீல் நிறுவனம் கூறியுள்ளது. 

மால்வேர்கள் பாதிப்புகளை எப்படித் தெரிந்துகொள்வது? 

மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ள செயலியினை உங்கள் ஆண்டிராய்டு போனில் நிறுவியிருந்தால் உங்களுக்குத் தொடர்ந்து பாப் அப் விழிப்பூட்டள்கள் வந்துகொண்டே இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் போலியான லாக் இன் பக்கம் காண்பிக்கப்படும். 

அப்போது உங்கள் வங்கி கணக்கில் உள்நுழைந்தால் உங்கள் வங்கி கணக்கின் முக்கிய விவரங்கள் மட்டும் இல்லாமல் பணமும் திருடுப்போக வாய்ப்புகள் உள்ளது எனப்படுகிறது. 

பாதிக்கப்பட்டுள்ள இந்திய வங்கி செயலிகள் பட்டியல்

1. axis.mobile (ஆக்சிஸ் மொபைல்)
2. snapwork.hdfc (எச்டிஎப்சி மொபைல் பேன்க்கிங்) 
3. sbi.SBIFreedomPlus (எஸ்பிஐ எனிவேர் பர்சனல்) 
4. hdfcquickbank (எச்டிஎப்சி மொபைல் பேன்க்கிங் லைட்)
5. csam.icici.bank.imobile (ஐசிஐசிஐ வங்கியின் ஐமொபைல்) 
6. snapwork.IDBI (ஐடிபிஐ பாங்க் கோ மொபைல்+) 
7. idbibank.abhay_card (ஐடிபிஐ வங்கியின் அபே) 
8. com.idbi (ஐடிபிஐ பாங்க் கோ மொபைல்)
9. idbi.mpassbook (ஐடிபிஐ வாங்க் எம்பாஸ்புக்) 
10. co.bankofbaroda.mpassbook (பரோடா எம்பாஸ்புக்)
11. unionbank.ecommerce.mobile.android (யூனியன் வங்கி மொபைல் பாங்கிங்) 12. unionbank.ecommerce.mobile.commercial.legacy (யூனியன் வங்கி கமர்ஷியல் கிளைண்ட்ஸ்) 

இத்தனி வங்கி செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எப்படி உங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்று இங்குப் பார்க்கலாம்.  

மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்களில் இருந்து மற்றும் எஸ்எம்எஸ் மூலம் வரும் இனைப்புகள் மூலமாக்க வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 

ஆப் அனுமதிகள் முக்கியமாகச் செயலியை மொபைல் போனில் நிறுவும் முன் கூகுள் பிளே ஸ்டோர் போன்றவற்றில் உள்ள செயலியின் அனுமதிகளைச் சரிபார்க்கவும். மொபைல் பாதுகாப்பு உங்கள் மொபைல் போனில் புதிய இயங்கு தளம் மற்றும் ஆண்டிவைரஸ் போன்ற செயலிகளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ளவும்.

, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக