Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 ஜனவரி, 2018

ஹீரோயிசமா காட்டுறீங்க?.. ஆதார் கார்ட் மோசடியை கண்டுபிடித்தவர் மீது வழக்கு!

காற்று, தண்ணீருக்கு அடுத்த இந்தியர்களுக்கு முக்கியமான விஷயம் எது என்று கேட்டால் கண்டிப்பாக மத்திய அரசு ஆதார் கார்ட் என்றுதான் சொல்லும். அந்த அளவுக்கு ஆதார் அட்டை எடுக்க சொல்லி இந்திய மக்களை அறிவுறுத்தியது. 

இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று தற்போது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. 

பத்திரிக்கையாளர் ஒருவர் நடத்திய கெத்து ஆப்ரேஷனில் இந்த உண்மை தெரியவந்து இருக்கிறது. ஆனால் போலீஸ் இந்த மோசடி நபர்களை பிடிக்காமல் தற்போது அந்த பத்திரிக்கையாளரை கைது செய்து இருக்கிறது. 

ஆப்ரேஷன் ஆதார்

'தி டிரிபியூன்' என்று ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் தான் இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. யாருடைய ஆதார் விவரம் கேட்டாலும் கொடுக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்று பஞ்சாப்பில் இயங்கி வந்து இருக்கிறது. 

அந்த குழுவில் இந்த பத்திரிக்கையை சேர்ந்த ராச்னா கைரா எனபவர் ஸ்டிங் ஆப்ரேஷனுக்காக சேர்ந்து இருக்கிறார். அம்பலம் ஆனது அதன் மூலம் அவர் ஆதார் மோசடியை கண்டுபிடித்தார். 

அவர் கொடுத்த 800 ரூபாய் பணத்திற்கு அவருக்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து நபர்களின் ஆதார் விவரங்களையும் பெறக்கூடிய வகையில் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்து பிரச்சனை ஆனது. பிரச்சனை இதனால் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் கொதித்தன. 

அனைவரும் ஆதார் அமைப்பிற்கும், மத்திய அரசிற்கும் எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இது தேசிய அளவில் பிரச்சனை ஆனது. மேலும் இன்னும் நிறைய குழுக்கள் இப்படி செயல்படுவதாக கூறப்பட்டது பீதியை கிளப்பியது. 

வழக்கு பதியப்பட்டது

தற்போது போலீஸ் ராச்னா கைரா மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. மூன்றிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முதலில் இந்த மோசடியை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக