'நான் ஏற்கனவே விளையாட
ஆரம்பிச்சுட்டேன் ஸார்' என்று விவேக் சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த
தியோடர் மெல்லச் சிரித்தார்.
"அந்த ஆட்டமும்
எனக்குத் தெரியும் ஸார்"
"வி நோ... வாட் யூ
ஆர்... என்னோட கவலை எல்லாம் எந்த ஒரு நிரபராதியும் சுடர்கொடி, திலீபன் கொலை
வழக்குகளில் மாட்டி தூக்குக் கயிறுக்கு முன்னாடி போய் நின்னுடக் கூடாது "
"அப்படியொரு நிலைமை
வராது ஸார்."
"வந்திடும்
போலிருக்கே ....?"
"நீதி தேவதையோட
கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும், குற்றவாளி உலகத்தின் எந்த மூலையில் ஒளிந்து
இருந்தாலும் தப்பிக்க முடியாது ஸார்...."
"வெல் செட் மிஸ்டர்
விவேக்... நாளைக்கு பொழுது விடியும் போது உங்க கிட்டயிருந்து ஒரு பாஸிட்டிவான பதிலை
எதிர்பார்க்கிறேன் ."
"ஷ்யூர் ஸார்"
"விஷ் யூ ஆல் த
பெஸ்ட் "
விவேக் செல்போனை அணைக்க
ரூபலா சமயலறையில் இருந்து மணக்கும் லெமன் டீயோடும், பிஸ்கெட் தட்டோடும்
எதிர்பட்டாள்.
விஷ்ணு எழுந்தான்,
"என்கிட்டே குடுங்க மேடம்... இவ்வளவு வெயிட்டை நீங்க வெச்சிக்கிட்டு நீங்க
ரொம்ப நேரம் நிற்கக்கூடாது... "
"என்னடா சொல்றார்
உன்னோட பாஸ்... நீதி தேவதையோட கண்கள் அது இதுன்னு விஜய், அஜித் ரேஞ்சுக்கு டயலாக்
பேசிட்டு இருந்தார்...."
விவேக்கின் உதடுகளில்
மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது. "உங்க ரெண்டு பேர்க்கும் ஒரு உண்மை
புரியலை."
"என்ன உண்மை
பாஸ்....?"
"சுடர்கொடி ரயில்வே
ஸ்டேஷனில் வைத்து கொடூரமாய் கொலை செய்யப்படணும்.... அதுக்கு முன்பாக திலீபன்
தன்னோட வீட்ல தூக்கில் தொங்கவிடப்படணும்ன்னு... எந்த இடத்துல முடிவான விஷயம்
தெரியுமா?"
"வெத்தலையில் மை
தடவிப் பார்த்தா தெரியும் பாஸ்."
ரூபலா பயமாய் விவேக்கைப்
பார்த்தாள்.
"நீங்க
சொல்லுங்க.... எந்த இடத்துல....?"
"டெல்லியில்"
"அது எப்படி அவ்வளவு
சரியாய் டெல்லின்னு சொல்றீங்க...?"
விவேக் தன்னுடைய
செல்போனில் இருந்த மெஸேஜ் ஆப்ஷனுக்குப் போய் சற்று முன் தனக்கு வந்த எஸ். எம்
.எஸ். செய்தி ஒன்றை ரூபலாவிடம் நீட்டினான்.
ரூபலா செல்போனை வாங்கி
வாய்விட்டுப் படித்தாள்.
"DONT THINK MORE
ABOUT THE MURDER S AND D, IT BRINGS RED DOTS"
ரூபலா கலவரமானாள்.
"என்னங்க
இது...?"
"உனக்கு புரியுதா
இல்லையா?"
"புரிஞ்சும் புரியாத
மாதிரி இருக்கு"
"விஷ்ணு
உனக்கு?"
பிஸ்கெட் தட்டை முடித்துவிட்டு
லெமன் டீயை ருசி பார்த்துக் கொண்டிடுந்த விஷ்ணு விவேக்கிடம் திரும்பினான்.
"என்ன பாஸ்... உங்க
கூட எத்தனை வருஷம் குடும்பம் நடத்திட்டு வர்றேன்...? உங்களுக்கு வந்த எஸ். எம்.
எஸ். எது மாதிரியானது... யார் அது அனுப்பினதுன்னு எனக்குத் தெரியாதா என்ன?"
"உன்னோட மேடத்துக்கு
சொல்லு!"
"மேடம்.... இந்த
எஸ். எம். எஸ்.டெல்லியில் இருக்கற சி.பி.ஐ . ஆபிஸிலிருந்து பாஸுக்கு வந்திருக்கு.
அனுப்பின ஆபிசர் பேர் சரத் சர்மா. பாஸுக்கு ரொம்பவும் வேண்டியவர். செய்தியில்
குறிப்பிட்டு இருக்கற S அண்ட் D என்கிற எழுத்துக்கள் யாரைக் குறிப்பிடுது தெரியுமா
மேடம். 'S' என்கிற எழுத்து சுடர்கொடியையும், 'D' என்கிற எழுத்து திலீபனையும்
குறிக்குது. இந்த ரெண்டு கொலையைப் பற்றி அதிகமாய் அலட்டிக்க வேண்டாம். அப்படி
அலட்டிக்கிட்டா மேலும் ரத்தத் துளிகளைப் பார்க்க வேண்டி வரலாம்ன்னு சரத் சர்மா
'வார்ன்' பண்ணியிருக்கார்."
"என்னங்க இவன்
சொல்றது நிஜமா....?"
"விஷ்ணுவுக்கும் சில
சமயங்களில் மூளை வேலை செய்யும். அப்படிப்பட்ட மகத்தான சமயங்களில் இதுவும்
ஒண்ணு...."
"நன்றி
பாஸ்...."
"ஆமா...!"
"அவர் யாரை மென்ஷன்
பன்றார்...?"
"அது விஷ்ணுவாகக்
கூட இருக்கலாம்"
"பா ..பா...
பாஸ்...."
"ஏன் நானாகக்கூட
இருக்கலாம் "
"இப்பத்தான் பாஸ்
மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கு "
"என்னங்க....
இவ்வளவு சீரியஸான மேட்டரை ஏதோ செல்லாத 1000 ரூபாய் நோட்டு மாதிரி மாதிரி டீல்
பண்றீங்க....?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக