இந்தியா 1991 உலகமயமாக்கலுக்குப் பின் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆதிக்கம் செலுத்தும் துறை வர்த்தகங்கள் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியும் மாற்றத்தையும் சந்தித்தது. இந்தத் திடீர் வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு நிறுவனத்திலும் பட்டம்பெற்ற நிர்வாகிகளின் தேவை அதிகமாக இருந்தது.
குறிப்பாகக் குடும்ப வியாபாரம் மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் கண்டிப்பாக எம்பிஏ படிக்கும் நிலைமை ஏற்பட்டது மட்டுமல்லாமல், பட்டம் பெற்றவர்கள் நிர்வாகம் செய்யும் போது வர்த்தகம் வேகமாக வளர்ந்தது.
இதனால் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் எம்பிஏ படிப்பு பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
பி அல்லது சி கிரேட் கல்லூரிகள்
கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பட்டதாரி ஒருவர் பி அல்லது சி கிரேட் மேலாண்மை கல்லூரிகளில் பட்டம் பெற்றால் கூடப் போதும், நிறுவனங்கள் கொத்திக்கொண்டு போகும்.
அப்போது நாட்டின் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் நிறுவனங்கள் சராசரியாக ஒரு வருடத்திற்கு 20 மேலாண்மை பட்டதாரிகளை அதிகச் சம்பளத்தில் பணியில் அமர்த்துவது வழக்கமாகக் கொண்டு இருந்தது. இப்போது எம்பிஏ பட்டதாரிகளின் நிலையைப் பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
வளாக வேலைவாய்ப்புகள்
2016-17 நிதியாண்டின் அறிக்கைப்படி வளாக வேலைவாய்ப்புகள் தேர்வில் பாதிக்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது என் AICTE அமைப்பு தெரிவித்துள்ளது.
47 சதவீதம் மட்டுமே..
2016-17ஆம் ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியேறிய எம்பிஏ பட்டதாரிகளில் 47 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைத்தது. இது அதற்கு முந்தைய வருடத்தை விடவும் 4 சதவீதம் குறைவாகும். இதுமட்டும் அல்லாமல் 47 சதவீதம் என்பது 5 வருட குறைவான அளவீடு என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டதாரிகள் எண்ணிக்கை
அதேபோல் பட்டதாரிகள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விடவும் 12 சதவீதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கணக்கீடுகளில் ஐஐஎம் கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை.
கல்லூரிகள்
இந்தியாவில் மட்டும் 5000 மேலாண்மை கல்லூரிகள் உண்டு, இதில் 2016-17ஆம் நிதியாண்டில் பட்டம் பெற்று வெளியேறிவர்கள் மட்டும் 2 லட்சம் பேர்
பழைய பாடத்திட்டம்..
இந்தியாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்றும் நிறுவனங்களுக்கு முக்கியத் தேவையாக விளங்கிய எம்பிஏ பட்டதாரிகளுக்குத் தற்போது வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்கு முக்கியக் காரணம், தற்போது சந்தை மற்றும் வர்த்தக முறைக்குத் தேவையான பாடத்திட்டம் இல்லாத காரணத்தால் நிறுவனங்களுக்கு இவர்களின் தேவை குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.
7 சதவீதம் மட்டுமே..
நாட்டின் தலைசிறந்த 20 கல்லூரிகளைத் தவிர, இந்தியாவில் இருக்கும் பிற மேலாண்மை கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளில் வெறும் 7 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைப்பதாக அசோசாம் ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பொறியியல் மாணவர்கள்
இதேபோன்ற நிலைமையில் தான் தற்போது இந்தியாவைக் கட்டமைக்கும் பொறியியல் மாணவர்களும் உள்ளனர் என்பது கூடுதல் அதிர்ச்சி செய்தாக உள்ளது.
பொறியியல் கல்லூரிகள்
இந்தியாவில் இருக்கும் 25 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய திறன் கொண்டுள்ளது. அதுவும் சமீபத்தில் வெளியான ஆய்வு மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல நிறுவனங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
95 சதவீத மாணவர்கள்
இன்றைய நிலையில் பொறியியல் மாணவர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையை நாடிச் செல்லுகின்றனர். ஆனால் இப்போது மென்பொருள் துறையிலும் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதால், இதுகுறித்து ஒரு முக்கியமான ஆய்வு செய்யப்பட்டது.
இதில் இந்தியாவில் இருக்கும் 95 சதவீத பொறியியல் மாணவர்களால் சுயமாகச் சாப்வேர் கோடு செய்யத் தெரியாத நிலையில் உள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகிறது.
புதிய படத்திட்டம்
இந்நிலையில் தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி அமைப்பு (AICTE) மேலாண்மை மற்றும் பொறியியல் பாடத்திட்டங்களைத் தற்போதைய நடைமுறைக்கும் தேவைக்கும் ஏற்றார் போல் மாற்றியமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
ஆசிரியர்கள்
அதேபோல் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர்களும் தகுதி திறனை ஆய்வு, AICTE உருவாக்கும் புதிய பாடத்திட்டத்தினை மாணவர்களுக்குச் சிறப்பான முறையில் கற்பிக்கும் திறன் கொண்டவர்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக