மரணம் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை நாம் எல்லாரும் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ந்திருப்போம். நமக்கு மிகவும் பிடித்தமான ஓர் உயிர் கடந்த நிமிடம் வரை உயிருடன் நம்முடன் கூடி வாழ்ந்த அந்த உயிர் திடீரென்று இல்லை எனும் போது ஏற்படுகிற தடுமாற்றங்களைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை.
அப்படி நம்மை விட்டு பிரிந்தவர்கள் இனி வரப்போவதில்லை என்று உணர்ந்து ஏற்றுக் கொள்வது ஒரு பக்கம் என்றால் உயிர் பிரிந்த அந்த உடலை என்ன செய்வது என்பது பெரும் கேள்வியாய் இருக்கும்.
இப்போது எரிப்பது அல்லது புதைப்பது என இரண்டு முறைகளைத் தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் ஆரம்ப காலங்களில்..... கிட்டதட்ட முந்தைய காலத்தில் பிணத்தை எந்தெந்த முறைகளில் எல்லாம் அப்புறப்படுத்தினார்கள் என்று பார்க்கலாம்.
மம்மி :
இப்போது நாம் மம்மி என்று சொல்லப்படுகிற பதப்படுத்தப்பட்ட பிணங்கள் குறித்து உங்களுக்கு ஓரளவாவது தெரியும். இது ஆரம்ப காலத்தில் எகிப்தியர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
ஒருவர் இறந்தபிறகு அந்த உடலை பதப்படுத்தும் நடைமுறைகள் மட்டும் எழுபது நாட்கள் நடைபெறுமாம்.
டஸ்ட் :
இது நவீன தொழில்நுட்பங்களால் சாத்தியப்படுகிறது. இறந்தவரின் உடலை இந்த கருவியில் வைத்து அழுத்தினால் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் வெள்ளை நிற டஸ்ட் போல கிடைக்கிறது. அவை கருவியில் இருக்கக்கூடிய ரெசோமேட்டரில் சேமிக்கப்படுகிறது.
தண்ணீர் மற்றும் 320 டிகிரி ஃபேரன்ஹீட்டுக்கு வெப்பம் ஆகியவை கொடுக்கப்படும். இந்த முறை பின்பற்றப்படுவதால் குறைந்த அளவிலான எனர்ஜியே செலவழிக்கப்படுகிறது. அத்துடன் குறைவான கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.
ப்ரொமிசன் :
இந்த முறையை ஸ்வீடிஷை சேர்ந்த பயாலஜிஸ்ட் சுசானே விக் மசாக் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார். இவர் கண்டுபிடித்த முறையின் படி முதலில் உடல் நுண்ணிய துகள்களாக அதாவது டஸ்ட்களாக மாற்றப்படும். பின்னர் அவை நிலத்தில் போடப்பட்டு பன்னிரெண்டு மாதங்களில் அந்த துகள்கள் அப்படியே மட்கிவிடுமாம்.
ஸ்வீடனில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த முறை தற்போது உலகம் முழுவதிலும் அறுபது நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது.
ட்ரீ பரியல் :
பிலிப்பெயின்ஸ் போன்ற நாடுகளில் இந்த ட்ரீ பரியல் முறை பின்பற்றப்படுகிறது. இறந்தவர்களின் உடலை மிகப்பெரிய ப்ளான்கெட்டில் சுற்றியோ அல்லது ஒரு பெட்டியில் அடைத்தோ மரத்தின் உயர்ந்த கிளைகளில் அதனை வைத்து விடுகிறார்கள்.
இப்படிச் செய்வதால் பிற விலங்குகளிடமிருந்து இந்த பிணங்களை காப்பற்ற முடிகிறதாம்.
ஃபையர் வொர்க் :
ஆம், பிணத்தைக் கொண்டு பட்டாசுகளும் செய்யப்படுகிறது. இந்த முறையை வெகுசிலர் தான் பின்பற்றுகிறார்கள். பிணத்தை எரித்து சாம்பல் முதலில் எடுத்துக் கொள்கிறார்கள். பின்னர் அந்த சாம்பலை பட்டாசு குப்பிகளில் நிரப்பி அதனை பற்ற வைத்து வெடிக்கச் செய்கிறார்கள்.
மேலே சென்று வெடிக்கும் போது சாம்பலும் நாலாபுறம் தெரிக்கிறது. இறந்தவர்கள் இந்த உலகத்துடன் கலந்துவிட்டார்கள் என்பதை உணர்த்துகிறதாம்.
ஆர்ட் :
இறந்தவர்களின் நினைவுகள் என்றும் தங்களுடன் பசுமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த முறையை கடைபிடிக்கிறார்கள்.
இறந்தவர்களின் சாம்பலைக் கொண்டு பல வண்ணங்களை தயாரிக்கிறார்க்ள். அதைப் பயன்படுத்தி ஓவியங்களை கார்போர்டில் அல்லது கண்ணாடிக்குடுவையில் உருவாகி வைக்கிறார்கள்.
சிலர் நகை மற்றும் அலங்கார கண்ணாடிப் பொருட்களைக் கூட தயாரிப்பதுண்டு.
ரீஃப் பரியல் :
கடல் பிரியர்களுக்கான இடம் இது. உடனே முழு உடலையும் கடலுக்கடியில் ஆழத்தில் சென்று புதைப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.
பிணத்தை எரித்த பிறகு கிடைக்கும் சாம்பளை சிப்பியிலோ அல்லது வேறு ஏதேனும் பொருளில் அடைத்து கடலுக்கடியில் பாறையையே உருவாக்கியிருக்கிறார்கள்.
ஃப்ளோரிடாவில் இருக்கும் பிஸ்கேன் என்ற கோஸ்டல் ஏரியாவில் இதனை நீங்கள் பார்க்கலாம்.
க்ரையோனிக்ஸ் :
இந்த முறையில் தான் தங்கள் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என்று பலரும் முன்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் க்ரையோ என்றால் குளிர்ச்சி என்று பொருள்.
மிகக்குறைந்த அளவிலான தட்பவெட்பத்தை வைத்து மனித உடலை பதப்படுத்த முடியும். இதில் இருக்கக்கூடிய ஓர் ப்ளஸ் என்ன தெரியுமா? எதிர்காலத்தில் இந்த முறையில் பதப்படுத்தும் உடல்களை மீண்டும் உயிர்பிக்க முடியும் என்பது தான்.
கப்பலில் :
கடல் அல்லது ஆறு போன்ற பகுதியில் ஓர் கப்பல் மிதக்கவிடப்படுகிறது. அதில் இறந்தவரின் உடல் அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாவற்றையும் நிரப்பி அந்தக் கப்பலை அலங்கரிக்கிறார்கள்.
சில நேரங்களில் இறந்தவருக்கு சேவகம் செய்ய அடிமை பெண்ணொருவரும் ஏற்றப்படுகிறார். பின் எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர் அந்தக் கப்பல் நெருப்பு வைக்கப்படுகிறது.
முற்றிலும் எரிந்து முடிந்த பிறகு அந்த கப்பல் அப்படியே தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு விடும்.
தொங்கும் பிணங்கள் :
சைனா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த முறை பின்பற்றுப்படுகிறது. பிணங்களை ஒரு பெட்டியில் அடைத்து உயரமான இடத்தில் தொங்க விடுகிறார்கள்.
பெரும்பாலும் அதற்கு மரத்திலான பெட்டிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
விண்வெளியில் :
இங்க வாழ்ந்து என்னத்த பாத்துட்டோம் எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்டலாம்னு இருக்கேன் என்று சொல்பவர்களுக்கான சிறந்த இடம் இது தான். ஸபேஸ் பரியல்.
கடந்த பத்து வருடகங்களாக இந்த முறை மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இறந்தவர்களின் சாம்பலை சின்ன கேப்சூலில் அடைத்து அதனை விண்வெளியில் சேர்த்து விடுவார்கள்.அது பாறைகளோடு அங்கே சுழன்று கொண்டிருக்கும் துகள்களோடு சேர்த்து சுற்றிக் கொண்டிருக்கும்.
விண்வெளி வீரர்கள்,ஆராய்ச்சியாளர்கள் போன்ற பலரது சாம்பல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
Sokushinbutsu :
Sokushinbutsu என்ற முறையில் புத்த மத குருமார்கள் தங்கள் இறப்பை தாங்களே முடிவு செய்து நீண்ட செயல்முறைக்குப் பின் உயிரைத் துறப்பார்கள். இங்கே உண்ணா நோன்பிருந்து இறத்தல் என்று சொல்வோம்.
இறந்த பிறகு உடலை அப்புறப்படுத்திவிடுவார்கள். ஆனால் அந்த புத்த பிக்குகள் தங்கள் உடலை பதப்படுத்தவும் செய்து கொண்டார்கள். இப்போது அதை ஓர் வணங்கும் இடமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த முறையை ஜப்பானில் தடை செய்து விட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக