உடலுக்கு வலு சேர்க்கும் சுவையான வெண்டைக்காய் பொறியல் ரெசிபி!
1/9உடலுக்கு வலு சேர்க்கும் சுவையான வெண்டைக்காய் பொறியல் ரெசிபி!
மனித உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஏராளமான சத்துகள் வெண்டைக்காயில் அடங்கியுள்ளன. வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான வெண்டைக்காய் பொறியலை எளிதாக எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம்.
வெண்டைக்காய் - 1/4 கிலோ, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் – 1, பூண்டு - 2 பல், தேங்காய் துருவியது - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய்-தேவையான அளவு
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக