Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 ஏப்ரல், 2018

ஸ்டெர்லைட் என்ன தான் பிரச்சனை


ஸ்டெர்லைட் என்ன தான் பிரச்சனை?  ஸ்டெர்லைட் பிரச்சனையும் அதன் வரலாறும்?


 இன்று தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி மீளாவிட்டானில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல பேர் இதை பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர் அப்படி என்ன தான் ஸ்டெர்லைட் ஆலையில் பிரச்சனை ?
உற்பத்தி:

ஸ்டெர்லைட் இந்தியா பயன்படுத்தும் காப்பரில் 40% உற்பத்தியை இந்த ஸ்டெர்லைட் ஆலையானது உற்பத்தி செய்கிறது

முதல் அடி:

வேதாந்தா குழுமத்தால் இயக்கப்படும் ஸ்டெர்லைட் ஆலையானது முதன் முதலில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி என்ற இடத்தில் 1992-ம் ஆண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டது ஒரு வருடத்திற்கு சுமார் 60000 டன் உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது..

இழப்பு:

ரத்னகிரி அலபோன்ஸா மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடமாக விளங்கியது.
ஸ்டெர்லைட் ஆலை தனது கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் அருகில் இருந்த நிலங்களில் தனது கழிவுகளை கொட்ட துவங்கியது இதனால் நிலத்தின் தன்மை மாறுபட தொடங்கியது

1993-ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன அதற்கான காரணமாக மாம்பழத்தில் காப்பர் போன்ற தனிமம் கலந்து உள்ளதாகவும் இது எங்கள் நாட்டு மக்களுக்கு உகந்தது அல்ல என  திருப்பி அனுப்பப்பட்டன.

இதுவரை இவ்வளவு பெரிய இழப்பை எதிர்பார்க்காத விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர் மாம்பழத்தில் காப்பர் தனிமம் கலந்து இருப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை தான் கரணம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆலை மூடல்:

விவசாயிகளின் போராட்டறதிற்கு  ஆலை நிர்வாகமும் அரசும்  செவி சாய்க்காத நிலையில் சிறிது சிறிதாக விவசாயிகளின் போராட்டம் வலுபெற ஆரம்பித்தது இதன் காரணமாக ஜூலை 15 1993 ஆம் ஆண்டு ரத்னகிரி கலெக்டர் உத்தரவின் பேரில் ஆலையானது மூடப்பட்டது.

ஆலை மூடப்படுவதை தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் அதன் ஆலையை வேறு இடத்தில தொடங்க பல்வேறு மாநில அரசிடம் அனுமதி கேட்டது..

குஜராத்தில் அனுமதி கேட்டதிற்க்கே அங்கே  விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கே அனுமதி மறுக்கப்பட்டது.

தூத்துக்குடி தேர்வு:

பல்வேறு பிரச்சனைகளை கடந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் ஆலையை அமைக்க முடிவு செய்தனர் தூத்துகுடியி தேர்வு செய்ய காரணம் சென்னையை போல அனைத்துவிதமான போக்குவரத்து வசதிகளும் உள்ள இடம் சாலை வழி,கப்பல் போக்குவரத்து ,விமான போக்குவரத்து ,ரயில் போக்குவரத்து என அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.

தூத்துக்குடியில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இருந்தாலும் அங்கு சென்னையை போல முன்னேற்றம் இல்லாமல் இருந்தது இதை   ஸ்டெர்லைட் நிர்வாகம் சரியாக பயன்படுத்தி கொண்டது.

ஆலைக்கு அடிக்கல் :

1994 ஆண்டு தூத்துக்குடி மீளாவிட்டானில் ஆலை தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது   

அதுவரை தொழிற்சாலைகள் இல்லாத தூத்துக்குடியில் முதன்முதலாய் ஆரம்பிக்கப்பட்டது இந்த   ஸ்டெர்லைட்தொழிற்சாலை இதன் மூலம் அங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் என மக்கள் அனைவரும் அதிரைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

பிரச்சனை ஆரம்பம்:
 தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு போன்ற பிரச்சனையால் அவதியுற்று வந்த நிலையில் தொழிற்சாலை வந்த பிறகு இந்த பிரச்சனையானது இன்னும் அதிகரிக்க தொடங்கியது.

அதற்க்கு முன்னாள் ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு போன்றவற்றால் அவதியுற்ற மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது..

மருத்துவ குழுவும் ஆய்வு செய்து கொண்டே இருந்தது மக்களிடம் இருந்து ரத்த மாதிரி போன்ற  எதுவும் சேமிக்க படாததால் மருத்துவ குழு தனது ஆய்வறிக்கையை வார்த்தைகளை மட்டும் சமர்ப்பித்தது.

மக்கள் செய்வதறியது திகைத்து இருந்த நிலையில் ஆலையில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் 

சுற்று சூழல் மாசு படுவதாக மாசு கட்டுபட்டுவாரியம் இந்த ஆலையை மார்ச் 30 2013-ம்  ஆண்டு ஆலைக்கு சீல் வைத்தனர்..

விசவாயுக் கசிவு பாதிப்பு:

இதுவரை இந்த ஆலையில் இருந்து 82 முறை விஷவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது..

அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன  

ஆலையில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் அருகில் உள்ள நிலத்திலேயே கொட்டப்படுகின்றன என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 


மீண்டும் ஆலை இயக்கம்: 

2013 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது

2018 ஆம் ஆண்டு மீண்டும் போராட்டம்:

தூத்துக்குடியில் வாழும் மக்கள் இத்தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டால் உயிர்வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்று, இத்தொழிற்சாலையை மூடக்கோரி பெப்ரவரி 05, 2018ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். பின்பு 40 தினங்களாக குமரெட்டியார்புரம் மக்கள் மரத்தடியில் அமர்ந்து போராட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மார்ச்சு 25, 2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் மற்றும் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 20,000க்கு அதிகமானோர் இத்தொழிற்சாலையை மூடக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் ஏன்?

  ஸ்டெர்லைட்தொழிற்சாலை மேலும் 500 ஏக்கர் நிலத்தை கைப்பற்றி தொழிற்சாலையை விரிவு படுத்த போவதாக அறிவித்த நிலையில் இந்த போராட்டம் மீண்டும் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் இந்த நிறுவனத்திற்கு இது மேலும் தலைவலியாக அமைந்துள்ளது. 


மக்களின் நிலை?

ஆலை நிரந்தரமாக மூடவேண்டும் என கோரிக்கை மற்றும் போராட்டம் தொடர்ந்தாலும் அதை நம்பி அதில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் நிலையையும் அதை சார்ந்து இருக்கும் சிறு வியாபாரிகளின் நிலையையும் யோசிக்க வேண்டும்.

ஒருவேளை அரசு ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுத்தால் அதில் வேலை பார்க்கும் தொழிலார்களுக்கு வேறு வேலையும் ஆலையினால் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சையும். மாசடைந்த சுற்றுப்புற சூழலையும்   ஆலை வெளியேற்றிய கழிவுகளை அகற்றியும் இதை அனைத்தும் ஆலை  நிர்வாகம் செய்யவேண்டும் என உத்தரவிட வேண்டும் 


குறிப்பு:

உங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன இதில் தவறு ஏதும் இருப்பின் கீழே உள்ள Comment Box ல்  உங்களது கருத்துகளை தெரிவிக்கவும்.

இப்படிக்கு

ஹரிஹர பாலசுப்ரமணியன்   
, ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக