Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 ஏப்ரல், 2018

'நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா...பவர்கிரிட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு!


'நெட்' தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா...பவர்கிரிட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு!



புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய மின்தொகுப்பு கழகத்தில் காலியாக உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரைனி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரைனி
காலியிடம்: 25
(பொது-13, ஓபிசி-6, எஸ்சி-4, எஸ்டி-2). இதில் ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.24,900-50,500.
வயது வரம்பு: 18 முதல் 28க்குள் 
ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
ஹெச்ஆர்/பெர்சனல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள துறைகளின் பாடப்பிரிவுகளில் எம்பிஏ/டிப்ளமோ/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
யுஜிசி-நெட் 2018 தேர்வில் பெறும் மதிப்பெண்கள், குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். யுஜிசி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-
இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. யுஜிசி-நெட் தேர்விற்கு ஏப்.5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். யுஜிசி-நெட் தேர்வு ஜூலை 8ம் தேதி நடக்கிறது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முன்னதாக நெட் தேர்வுக்கு விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 01.7.2018.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.7.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு லிங்க்:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. அறிவிப்பு பிடிஎப்:

விண்ணப்பம் குறித்து முழு விவரம் அடங்கிய பிடிஎப் பைல் டவுண்லோட் லிங்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக