டான்செட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியீடு!
எம்.பி.ஏ, எம்.சி.ஏ , எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் போன்ற முதுகலைப்படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில் தமிழக கல்லூரிகளில் படிப்பதற்காக ஆண்டுதோறும் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்தத் தேர்வை நடத்தி வருகிறது. இதனிடையே, இந்த (2018) ஆண்டிற்கான 'டான்செட்' தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
தேர்வு எழுத அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வு எழுத விரும்புவோர் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். நூறு ஒரு மதிப்பெண் அடங்கிய வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். தவறாக பதில் அளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 1/3 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
நுழைவுத்தேர்வு கட்டணம்:(ஆன்லைன் மூலம் மட்டும்)
நுழைவுத்தேர்வு கட்டணம் ரூ .500 / - (எஸ்சி / எஸ்சிஎ / எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ. 250 / - செலுத்த வேண்டும்)
நுழைவுத்தேர்வு கட்டணம் ரூ .500 / - (எஸ்சி / எஸ்சிஎ / எஸ்டி விண்ணப்பதாரர்கள் ரூ. 250 / - செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்க கடைசி தேதி:ஏப்ரல் 23
தேர்வு நடைபெறும் நாள்: மே 19 மற்றும் 20
நுழைவுத் தேர்வு பின்வரும் நகரங்களில் நடைபெறும்:
நுழைவுத் தேர்வு மையங்கள்:
1. சென்னை
2. கோயம்புத்தூர்
3. சிதம்பரம்
4. திண்டுக்கல்
5. ஈரோடு
6. காரைக்குடி
7. மதுரை
8. நாகர்கோவில்
9. சேலம்
10. தஞ்சாவூர்
11. திருநெல்வேலி
12. திருச்சிராப்பள்ளி
13. வேலூர்
14. விழுப்புரம்
15. விருதுநகர்
டான் செட் நுழைவுத்தேர்வு அறிவிப்பு குறித்த விரிவான விபரங்களுக்கு இந்தலிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'அட்வடைஸ்மெண்ட்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.
4. பாடத்திட்ட விவரம்:
தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்த விவரங்களை இந்தலிங்கை கிளிக் செய்து பெறலாம்.
5. சேர்க்கைக்கான தகுதி:
விண்ணப்பிப்பவர்களுக்கான தகுதி குறித்து முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.
5. ஆன்லைன் விண்ணப்பம்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லிங்க்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக