Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

MNP ல ஏர்டெல்லை விட்டுட்டு போறீங்களா?


Image result for airtel
ஏர்டெல் இந்திய அளவில் மொபைல் நெட்ஒர்க்கில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வந்த ஏர்டெல் ஜியோவின் வருகைக்கு பின்னர் ஆட்டம் கண்டது என்றால் மிகையாகாது.


தான் நிர்ணயம் செய்வதே கட்டணம் மற்றும் காலநாட்கள் என்ற காலம் போய் போட்டியாளர்கள் நிர்ணயம் செய்யும் கட்டணத்திற்கு கீழ் இறங்கி வந்தது ஏர்டெல்

ஜியோவின் வருகைக்கு பின்னர் பல நெட்ஒர்க் நஷ்டம் அடைய தொடங்கியது முதல் இன்று வரை எதிர்த்து போராட பல நெட்ஒர்க் முயற்சித்து வரும் வேளையில் ஏர்டெல்லின் வாடிக்கையாளர் சேவையோ வாடிக்கையாளரை கடுப்பேற்றும் வகையில் உள்ளது

ஏர்டெல்லில் நீண்ட காலமாக இருந்த ஒருவர் ஜியோவின் வருகைக்கு பின்னர் ஏர்டெல்லை விட்டு மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (MNP ) மூலம் ஜியோவிற்கு சென்றார் ஜியோவில் சில மாதங்கள் கடந்த நிலையில் மீண்டும் ஏர்டெல்லிற்கு மாறியுள்ளார்.

வாடிக்கையாளர் சேவை: 
ஏர்டெல்லிற்கு மாறிய பின்னர் தனக்கு இணையதளசேவை கிடைக்கப்பெறவில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான பதில் மட்டுமே வந்தது ஆனால் பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடு இல்லை

டூப்ளிகேட் சிம்:

டூப்ளிகேட் சிம் வாங்கினால் இணையதளசேவையில் உள்ள பிரச்சனை தீரும் என வாடிக்கையாளர் சேவை அதிகாரி கூற அருகில் உள்ள ஏர்டெல் ஷோரூம்மை  அணுகி கேட்டபோது அவர்கள் வாடிக்கையாளரிடம் போஸ்ட்பெய்டு  (Postpaid) சிம்மாக மாற்றிக்கொண்டால் உதவுவதாகவும் இல்லை என்றால் வேறு  ஏர்டெல் ஷோரூம்மை பார்த்து கொள்ளும்படி கூற
ஒரு டூப்ளிகேட் சிம்கார்டிற்காக 4 முதல் 5 ஷோரூம் வரை அணுகி கேட்டபோதும் பதில் இல்லை

இதை பற்றி ஏர்டெல் 121 கேர்ல் மின்னஞ்சல் மூலமாக குறிப்பிட்ட  ஏர்டெல் ஷோரூம்மை  பற்றி புகார் கொடுத்தால் தகுந்த நடவடிக்கை ஏதும் எடுத்தப்பாடு   இல்லை.

இதை பற்றி விரிவாக ட்விட்டர்ல் முறையிட்ட போது குறிப்பிட்ட ஒரு கால நாட்களுக்குள் வாடிக்கையாளரின் பிரச்சனை தீர்க்கப்படும் என உறுதி அளித்தனர் 

குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தும் பிரச்சனை தீர்க்கப்படத்தை கண்டித்து மீண்டும் புகார் அளிக்க இம்முறையும் குறிப்பிட காலக்கெடு வழங்கப்பட்டு காலக்கெடுவும் முடிந்தது ஆனால இன்னும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை


இதே போல பல வாடிக்கையாளர்களின் புகார்களை உதாசீனப்படுத்தி வருகின்றது என்று கேள்வி பட்ட நிலையில் இன்று அது நேரடியாக உணரப்பட்டது பல்வேறு பிரச்சனையில் சிக்கி தவித்த ஏர்டெல் ஏர்டெல் பேமெண்ட்  பேங்க் விஷயத்தில் அதன் நன்மதிப்பை இழந்த நிலையில்  வாடிக்கையாளரின் புகாரை தீர்க்கவும் மெத்தனம் காட்டி வருவது வாடிக்கையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது

நீங்க யாரவது ஏர்டெல்லை விட்டு வேற நெட்ஒர்க் போய்விட்டு மீண்டும் ஏர்டெல்லிற்கு வர நினைத்தால் கொஞ்சம் யோசிச்சுக்கோங்க இந்த மாதிரி பிரச்சனை உங்களுக்கும் வரலாம்..

நீங்களும் ஏர்டெல்லில் இந்த மாதிரி வேற பிரச்சனைகள் ஏதும் சந்திச்சு இருந்தா கீழ உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணுங்க...
  
,