Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 20 டிசம்பர், 2018

திவால் ஆகுமா இந்தியா - பாகம் 1

ரெண்டு வருசமா இந்தியா பெரிய பொருளாதார நெருங்கடியை சந்திக்க போகுதுன்னு சொல்லிட்டு இருந்திங்க, நேத்து ரகுராம்ராஜன் இந்தியா திவால் ஆக போகுதுன்னு சொல்றார், நாங்க என்ன தான் பண்றது, எப்படி எங்களை காப்பாத்திக்கனும் என்பதற்கான பதில் கீழே

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேன்னு ஒரு பழமொழி கேட்டதுண்டா?
புரியலைல, நல்லா யோசிச்சு பாருங்க., ஒரு வருடங்களுக்கு முன்னால் வரைக்கும்

அம்மா சொன்னா கேட்க மாட்டிங்களா, ஆட்டிகா வாங்க, உங்க நகையெல்லாம் கொடுத்துட்டு போங்க.
ஜெயில் லாக்கர்ல இருக்கும் உங்க தங்கத்தையெல்லாம் எடுத்துட்டு வந்து முத்தூட்ல கொடுங்க
குழந்தைங்க தான் உங்க நகையெல்லாம் அந்த நிறுவனத்தில் வாங்குவாங்க
நமக்கு வீடு தான் முக்கியம், நகை இல்ல. கொண்டு போய் வித்துருங்க
இது சாம்பிள் தான், நான் நிறைய கம்பெனி பெயரை குறித்து வைக்கல.

ஏன் இந்த தீடீர் விளம்பரம்? போக போக புரியும்

இந்தியா திவால் ஆகுமா என்றால் ஒரு நிறுவனம் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது போல் ஒரு நாடு கொடுக்க முடியாது. பொருளாதர நெருக்கடியை நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை வைத்து சொன்னால் உங்கள் எளிதல் புரியும்

https://oorkodangi.blogspot.com


உலகிலேயே பணக்கார நாடு எது என்று கேட்டால் அமெரிக்கா என அனைவருக்கும் தெரியும், அந்த நாடு 2009 ஆம் ஆண்டு சப்-ப்ரைம் கிரிஸிசிஸ் என்ற சிக்கலை சந்தித்தது. அது ஏன் நடந்தது? என்பது எங்களை போல் உலக பொருளாதாரத்தை கவனிப்பவர்களுக்கு தான் தெரியும், சாமானியர்களை பொறுத்தவரை ஒரு சம்பவம் மட்டுமே

அமெரிக்கா தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஒரு தவறான பொருளாதார கொள்கை முடிவு எடுத்தது, அதாவது வங்கிகளுக்காக வட்டியை குறைத்தது, அதை FED RATE என்போம். அதிக பணப்புழக்கம் பெற வங்கிகள் வகைதொகை இல்லாமல் கடன் கொடுத்தது.

உள்நாடு, வெளிநாட்டில் இருந்து வந்தோர் என்றும் பாராமல் வீடு வாங்க, கார் வாங்க 90% கடன் கொடுத்தது. ஐடி கம்பெனியை பொறுத்தவரை அதில் வேலைபார்ப்போர் பாதி பேர் மங்குணிகள் என்பேன், இந்த வருமானம் நிரந்தம் தானே என எல்லா கடனையும் வாங்கி, வீடு, கார் என சொத்தாக்கி EMI கட்டுவார்கள்.

எங்களுக்கு வந்த காண்ட்ராக்ட் முடிந்தது. அடுத்து ஆர்டர் வந்தால் அழைக்கிறோம், இப்ப நீங்க வீட்டுக்கு போலாம் என்று உங்கள் அடையாள அட்டைய புடுங்கிட்டு வீட்டுக்கு அனுப்பிருவான் கம்பெனிகாரன், அப்புறம் எப்படி வீட்டுக்கும், காருக்கும் வட்டி கட்றது, அம்மாதிரி சொல்லாமல் கொல்லாமல் விட்டு போன வீடுகள் இன்றும் அமெரிக்காவில் உள்ளது., அனைவர்கள் வாழ்க்கை காரிலே தான்,



சொத்து தான் இருக்கே, வங்கிக்கு என்ன பிரச்சனைன்னு தோணுதா? எந்த பொருளையும் நாம் வாங்கிய விலைக்கு விக்க முடியுமா? வங்கிகள் தடுமாறின, பொதுமக்கள் பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டர். அன்றான பணப்புழக்கத்தே வங்கியில் பணம் இல்லை, ஊதாரி நாடு என பெயரெடுத்த அமெரிக்கா தலைகீழாக மாறியது

அன்னிய நாட்டு முதலீட்டார்கள், தங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினர். உள்நாட்டு உற்பத்தி குறைந்தது, காரணம் வாங்க ஆள் இல்லை. பங்கு சந்தை பாதாளத்திற்கு இறங்கியது, எல்லா பணமும் தங்கம் மற்றும் வெள்ளீயில் முதலீடு செய்யப்பட்டது. ஒரு அவுன்ஸ் 960$ ஆக இருந்த தங்கம் 2000$ டாலராக உயர்ந்தது..

இப்ப தெரியுதா யானை வர்றதுக்கு முன்னாடி ஓசை ஏன் வருதுன்னு

பதிவு ரொம்ப பெருதா போகுது, இதை தொடராவே எழுதுறேன். கோவிச்சிக்காதிங்க


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக