Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 18 டிசம்பர், 2018

காதில் உள்ள அழுக்கை நீக்காதீங்க. அது மிகவும் நல்லது.

காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒரு முறையாவது குளித்து முடித்தவுடன் சுத்தம் செய்துவிடுகிறோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ் ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்போம்.

சிலருக்கு காதை சுத்தம் செய்த பிறகு ஏதோ புதிய ஹெட்செட் மாற்றியது போல சத்தங்களை நன்கு கேட்பது போல உணர்வார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்களோ காதில் உள்ள அழுக்கை நீக்க வேண்டாம் என்று கூறிவருகின்றனர்.






ஆம் இது தான் உண்மை. காதில் உள்ள அழுக்கை நீக்குவது தவறு. ஏனெனில் இது தான் காதின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர். என்றாவது இதை பற்றி யோசித்தது உண்டா? அது ஏன் காதில் உண்டாகும் அழுக்கு மட்டும் மெழுகு போன்று இருக்கிறது என்று.


கொழுப்பு அமிலங்களும், கொலஸ்ட்ராலும் நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும். அந்தந்த உயிரினம், வயது, உணவுமுறை சார்ந்து காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருள் வேறுபடுகிறது மற்றும் வேறு தாக்கமும் பெறுகிறது. இது தான் காதின் பாதுகாவலன் உண்மையில் நாம் அழுக்கு என எண்ணி வாரம் வாரம் சுத்தம் செய்து அகற்றும் இந்த மெழுகு போன்ற பொருள் தான் நமது காதினை காக்கும் பாதுகாவலன் ஆகும்.


சில ஆராய்ச்சி முடிவுகளில் காதில் உருவாகும் இந்த மெழுகு போன்ற பொருளை எந்த காரணம் கொண்டும் அகற்ற வேண்டாம் என்றும், இந்த மெழுகு போன்ற பொருள் அதிகரிக்கும் போது, காதின் மேல் மற்றும் வெளிப்புறங்களிலும் தோன்றும். அப்போது மட்டும் காதின் வெளிப்புறத்தை பஞ்சு துணி அல்லது தண்ணீர் பயன்படுத்தி துடைத்து கொள்ளுங்கள். என கூறப்பட்டுள்ளது.


தொப்புள் மற்றும் கண்களின் ஓரத்தில் இதர உடல் பாகங்களிலும் இடுக்கு பகுதிகளில் உண்டாவது போன்ற வியர்வை மற்றும் அழுக்கு கலந்த பொருள் அல்ல. இது காதினை பாதுகாக்கும் பொருளாக தான் நாம் காண வேண்டும்.


முக்கியமாக நமது வீட்டில் பாட்டி மற்றும் அம்மாக்கள் கறிவேப்பிலை குச்சி போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தி காது குடைவார்கள். இதை முதலில் நிறுத்த கூற வேண்டும். இதனால் காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி பாதிக்கப்படும்.


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக