நமது அன்றாட வாழ்வில் ஒன்றித்துப்போன ஒன்றுதான் காகம். காக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்ட காகம் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது.
இதற்குக் காரணம் காகம் சாப்பிடும்போதும் தனது இனத்துக்கு ஒரு துன்பம் வரும்போதும் ஒன்றாக சேர்வதுதான். பொதுவாக உணவைக் காணும் தனியொரு காகம் அதனை தான் மட்டுமே சாப்பிடவேண்டும் என நினைக்காது. ஏனைய காகங்களையும் அழைக்கும் வகையில் கா கா என்ற தொனியினைக் கொடுக்கும்.
காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?
காகத்தின் கா கா தொனி மனிதர்களாகிய எமக்கு ஒரே வகையிலேயே கேட்டாலும் சக காகங்களுக்கு அவற்றின் அர்த்தம் புரிந்துவிடும். காகம் உணவுக்காக மட்டும் ஒன்றுகூடாது. அவை தமது இனத்துக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் சும்மா இருக்காது. உடனே அந்த இடத்தில் ஒன்றுகூடி பகைமையை எதிர்க்கும். அடுத்தவீட்டுப் பிரசினைதானே என்று தன்பாட்டிற்கு இருந்துவிடும் உத்தேசம் காகத்திடம் இருப்பதில்லை.
காகத்திடம் இருக்கின்ற குணங்களில் ஒன்று குறி பார்த்து எச்சமிடுவதுதான். தனக்கு பிடிக்காத நபர்களை காகம் தெளிவாக இனம்கண்டுகொண்டால் அவர்களைத் தேடித்தேடி எச்சமிடுமாம். நாம் மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும்போது சில காகங்களுக்குப் பிடிக்காதாம். நம்மை அந்த இடத்தை விட்டுத் துரத்துவதற்காக காகம் பயன்படுத்தும் உச்சக்கட்ட ஆயுதம்தான் எச்சம். இதனால் எமக்கு நேரே உள்ள கிளையொன்றில் அமர்ந்திருந்து உச்சந்தலையைக் குறிபார்த்து எச்சமிடும் தன்மை காகத்திடம் காணப்படும்.
காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?
பொதுவாக பறவைகள் பறந்தபடியே இரை உண்ணும் தன்மை கொண்டவை. அதேபோல எச்சமிடும் தன்மை கொண்டவை. ஆனால் காகத்திடம் இந்த தன்மை இன்னும் சிறப்புவாய்ந்தது. அதாவது தனக்கு பிடிக்காத நபர்களாக தெரிபவர்கள்மீது பறந்தபடியே குறி தவறாது எச்சமிட்டுவிடும்.
என்னதான் இருந்தாலும் காகம் எமது மண்ணிற்குரிய பறவையாகவும் எந்த நேரமும் எமது கண்ணுக்குத் தெரிகின்ற பறவையாகவும் விளங்குவது மட்டுமன்றி எமது சுற்றுச் சூழலின் சிறந்த நண்பனாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக