ஒருவரது முகத்தில் பருக்கள் இருந்தால், அது அவர்களது தோற்றத்தையே அசிங்கமாக காட்டும்.ஆண்கள் மற்றும் பெண்களின் அழகை முற்றிலும் கெடுக்கும் ஓர் பிரச்சனை தான் முகப்பருக்கள்.இன்று ஏராளமான இளம் வயதினர் முகத்தில் பருக்களுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி முகத்தில் அதிக பருக்கள் வருவதற்கு காரணம், சரும வகை மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை போன்றவை தான்.
ஒருவரது முகத்தில் பருக்கள் வந்தால், பலரது மனதிலும் முதலில் எழுவது, இதை அப்படியே பஞ்சு கொண்டு உடைத்து துடைத்துவிட்டால் போய்விடும் என்பது தான். சிலர் பஞ்சு பயன்படுத்தி பருக்களை உடைத்தாலும், ஏராளமானோர் விரல் நகங்களைக் கொண்டு உடைத்துவிடுவர். ஆனால் இப்படி செய்தால், பருக்கள் உள்ள இடம் சிவந்து போவதோடு, அவை மிகுதியான அரிப்பையும் உண்டாக்கும்.இவற்றில் ஒன்றை தவறாமல் அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் பருக்களால் வந்த தழும்புகளை முற்றிலும் மறைத்துவிடலாம்.
உப்பு
வீட்டில் உப்பு உள்ளதா? இது பருக்களால் வந்த தழும்புகளை எளிதில் எதிர்த்துப் போராடும். அதுவும் உங்கள் பருக்கள் உடைந்து, அதிலிருந்த சீழ் மற்ற இடங்களில் பட்டால், பருக்கள் பரவ ஆரம்பிக்கும். இந்நிலையில் உப்பைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், அது பருக்களை பரவ விடாமல் தடுக்கும். அதற்கு உப்பை நீரில் கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து நீரால் அப்பகுதியைத் தேய்த்து கழுவுங்கள்.
பூண்டு
நம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பூண்டு, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. குறிப்பாக இது பருக்கள் மற்றும் பருக்கள் விட்டுச் சென்ற அசிங்கமான தழும்புகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் முகத்தில் உள்ள பருக்கள் எளிதில் உடையும் வகையில் இருந்தால், பூண்டு பயன்படுத்துங்கள். அதற்கு சிறிது பூண்டை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி 2-3 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் பருக்கள் மட்டுமின்றி, தழும்புகளும் நீங்கும்.
முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கரு சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் அற்புதமான பொருளாகும். ஒருவர் முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, தழும்புகளும் மறைந்து, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பிரகாசமாகவும், பளிச்சென்றும் காணப்படும். அதிலும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, மாஸ்க் போட சிறப்பான பலன் கிடைக்கும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட தேவையான சத்துக்களாகும். அதற்கு க்ரீன் டீயை போட்ட பின், அதன் இலைகள் அல்லது க்ரீன் டீ பையை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளை செய்து வந்தால், பருக்கள் மட்டுமின்றி தழும்புகளும் மறையும்.
வேப்பிலை
வேப்பிலை மிகவும் சிறப்பான மூலிகைப் பொருள். இது சருமத்தை சுத்தம் செய்வதோடு, சருமத்தைத் தாக்கும் பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் இதர தொற்றுகளில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும். அதற்கு வேப்பிலையையோ, அதன் எண்ணெயையோ அல்லது அதன் பொடியையோ கொண்டு சருமத்தை பராமரிக்கலாம். முகப்பரு அதிகம் இருந்தால், நற்பதமான வேப்பிலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக