Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 பிப்ரவரி, 2019

சீரக இடியாப்பம்

cumin seeds String Hoppers




தேவையான பொருட்கள்:
 இட்லி அரிசி – 200 கிராம்
 இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட்தலா ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள், சீரகத்தூள்தலா அரை டீஸ்பூன்
 நெய் – 4 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள்சிறிதளவு
 நல்லெண்ணெய்சிறிதளவு
 உப்புதேவையான அளவு
செய்முறை:

·      இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

·      மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும்.

·      அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்).

·      உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாககட்செய்து பார்த்தால் மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).

·      வாணலியில் நெய் விட்டு இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கிமிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் போட்டு, இடியாப்பத்தை சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
குறிப்பு : நறுக்கிய கொத்தமல்லி, புதினா தூவி கலந்து சாப்பிடலாம்.
நன்மைகள்ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. அவிக்கபடும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக