Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 பிப்ரவரி, 2019

ஆன்மீகமும் அறிவியலும் மலைக்கோயில் கட்டியது ஏன் ?







நம் முன்னோர், மலைகளில் கோயில்களை அமைத்து, வழிபாடு செய்ததற்கு ஆன்மிகக்காரணம் மட்டுமல்ல. அறிவியல் காரணமும் இருக்கிறது. நம் ஆரோக்கியம் கருதியே அவர்கள் இவ்வாறு செய்தனர்.


அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும் என்பதற்காக, பாத விநாயகர் கோயிலை அடிவாரத்தில் கட்டினர். மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல திறந்தவெளியாக இருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம் கொண்டது. அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும். தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்கு சிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும். மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில் மருத்துவகுணம் நிறைந்திருக்கும்.


திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப் பேசிக் கொண்டு சுற்றக் கூடாது. இறை நினைவுடன் மட்டும் சுற்ற வேண்டும். இதனால் தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம் அடங்கினால் உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில் தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன. இன்றோ, சில மலைக்கோயில்களில் வாசல் வரை வாகனங்களில் செல்லும் வழக்கம் வந்து விட்டது. முடியாதவர்களும், முதியவர்களும் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தால், இறையருளுடன் உடல்நலமும் பெறலாம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக