Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 11 பிப்ரவரி, 2019

வேப்பமரம்

Neem Tree




வேம்பு முதன் முதலில் இந்தியாவில் தோன்றியதாக நம்பப்படுகின்றதுஇலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது.

·      வேப்பம் பூ இல் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம்வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பயன்படுகிறதுசராசரியாக 15 மீ. வரை உயரமாக வளரக்கூடிய மரம். இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டுள்ள தாவரமாகும்.
·      வேம்பு இலைகள், இறகு வடிவமானவை, பல சிற்றிலைகளைக் கொண்டவை, ஒவ்வொரு சிற்றிலையும் சாதாரண இலையைப் போன்றே காணப்படும். வேம்பு பூக்கள், சிறியவை, வெண்மையானவை, சிறு கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.
·      வேம்பு காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். வேம்பு பழங்கள், 1.5செ.மீ. வரை நீளமானவை, மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மலை வேம்பு மிலியேசியே  குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது 20-25 அடி உயரம் வரை உயர்ந்து மரமாக வளரக்கூடியது
மலைவேம்பில் 2 வகை உள்ளது. மீலியா டூபியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட மலைவேம்பு பயிர் செய்ய ஏற்றது
துலுக்க வேம்பு என்று அழைக்கப்படும் இன்னொருவகை வேம்பு நிறைய கிளைகளுடன் தரமற்ற மரமாக வளரக் கூடியது.

மருத்துவ பயன்கள்

·         வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக் காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.

·         வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

·         தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும்
·         இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக