போளி என்றால் நிறைய பேருக்கு மேற்கு மாம்பலம் தான் நியாபகத்துக்கு
வரும். போளிக்கான நிறைய
கடைகள் அங்கே பிரபல்யம். அதே போல இந்த தட்டுக்கடையும். தி.நகர்
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து
சப்வேயில் ஏறியவுடன் வலது பக்கத்தில் உள்ள கோயிலுக்கு முன்
அமைந்த சிறு கடை. ஸ்வீட், மற்றும்
கார வகைகள் காலையில் போட்டிருப்பார்கள். மாலை வேலையில்
வடை, போண்டா, மசாலா போண்டா,
தேங்காய் போளி, பருப்பு போளி, மசாலா போளி என வரிசைக் கட்ட
ஆரம்பித்துவிடுவார்கள். சுடச்சுட
போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும் கடை. டிமாண்டுக்கு
ஏற்றார்ப் போல
ஐயிட்டங்களை போட ஆர்மபிப்பார்கள் பெரும்பாலும் இரவு எட்டு மணிக்குள்
எல்லா போண்டா,
போளி வகைகள் காலியாகிவிடும். எனக்கு இங்கே பிடித்தது தேங்காய் மற்றும்
மசாலா போளி
வகைகள். சைசில் சின்னதாய் இருந்தாலும், தேங்காயை வெல்ல பாகுடன் ஊற வைத்து
அதை
சூடான போளியாய் சாப்பிடும் போது தேங்காயும், வெல்லப்பாகின் ஜூஸும், நெய் வாசனையும்
வாவ்வ்..
சின்ன விலையில் பெத்த டேஸ்டுடன் போளி சாப்பிட விரும்புகிறவர்களுக்கான
இடம்.
என்ன நின்று கொண்டே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக