தேவையான பொருட்கள்:
- திக்கான சார்ட் பேப்பர்
- கத்தரிக்கோல்
- பென்சில்
- பன்சிங் மெஷின்
- ஸ்டேப்ளர்
- நூல்
எப்படி செய்வது?
தொப்பி தயாரிக்க திக்கான் சார்டை பயன்படுத்துங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட சார்டில் பெரிய வட்டத்தை வரையுங்கள். வீட்டில் இருக்கும் பெரிய தட்டு அல்லது பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டின் மூடியைக் கொண்டு வட்டம் வரைந்துகொள்ளுங்கள்.
வட்டத்தை கத்திரிக்கோலால் வெட்டி எடுங்கள். வெட்டிய வட்டத்தை இரண்டாக வெட்டுங்கள். ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் நீளமான பக்கம் (வளைவான பக்கம் அல்ல) உள்ளே செல்லும் மடித்தால், கோன் வடிவம் உருவாகும். வளைவான பக்கத்தில் இந்த கோன் வடிவம் உருவாகும்.
அதை அப்படியே வைத்து கோனின் மேல்பக்கமும் அடிப்பக்கமும் ஸ்டேப்ளர் செய்யுங்கள். இதுதான் தொப்பி. ஸ்டேப்ளர் செய்த பக்கத்தை பின்பக்கமாக வைத்து, தொப்பியின் இடது வலது பக்கத்தில் பன்சிங் மெஷினால் ஓட்டை போட்டு, நூல்லை கட்டிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் தொப்பி தயார்! இதேபோல் நிறைய தொப்பிகளை செய்து நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழுங்கள்!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக