படி #1
உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் :
அடித்தள பூச்சு (அ) முகப்பு பூச்சு
நிறத்திற்கான "வார்னிஷ்"
ஒரு மேல் பூச்சு
வெள்ளை (அ) க்ரீம் "வார்னிஷ்"
நகத்தில் பயன்படும் "வார்னிஷ்" நீக்கி
ஏதேனும் நக கணு (அ) சமையல் எண்ணை
நக கணுவில் பயன்படும் சிறிய குச்சி
ஒரு "எமெரி" அட்டை
சிறிது பஞ்சு
சிறிய அளவு கை மற்றும் நக "மாய்ஸ்ச்சரைசர்"
படி # 2
நேரம் ஒதுக்கி "மேனிக்யூர்" செய்துகொள்ளுங்கள்.
அவசரத்தில் செய்துகொள்ளும் போது, நிலைமை முற்றிலும்விரும்பத்தகாததாக அமையும். போதுமான நேரம் ஒதுக்கி செய்தால், விளைவும்நன்றாக இருக்கும்,
இறுதி வரை நீடிக்கவும் செய்யும்.
படி # 3
நக "வார்னிஷ்" நீக்கி
ஒரு பஞ்சு துண்டால் உங்கள் நகத்தில் உள்ள பழைய நக "வார்னிஷை" ஏதேனும் ஒரு "வார்னிஷ்" நீக்கியால் துடைத்து எடுக்கவும்.
படி # 4
படி # 4
நகக்கணு எண்ணெய்
நகத்தின் விளிம்பில் சிறிது நகக்கணு எண்ணெய் விட்டு நன்கு மசாஜ் செய்துகொள்ளவும்.
பின்பு சற்று நேரம் எண்ணெய்யை ஊற விட்டால் , உங்கள் நகம் மிருதுவாகிவிடும்.
நகக்கணு கிட்டாத பட்சத்தில், ஆலிவ் எண்ணெய் அல்லது சமையல்எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
படி # 5
நக வடிவம் நன்றாவதற்கு
வார்னிஷ் செய்தாலும் நகத்தின் வடிவம் கோணல் மாணலாக இருந்தால்பயனில்லை, ஆகையால் "எமெரி" பட்டையை கொண்டு நீங்கள் விரும்பும்வடிவம் பெறும் வரை நகத்தை சீராக்குங்கள். நினைவிருக்கட்டும்,
"எமெரி" பட்டையை மாற்று திசையில் தேய்க்காமல் ஒரே திசையில் தேய்க்க வேண்டும்.
படி # 6
நகக்கணுக்களை பராமரித்தல்
நகத்தின் நுணியில் நம் சருமம் சேரும் பகுதியை தான் நகக்கணு என்கிறோம்.
நகக்கணு நகத்தின் பகுதியே ஆனாலும், அது எண்ணெய் பசையுடன் இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் "வார்னிஷ்" நகத்தில் அதிக நேரம் நீடிக்காது.
ஆகையால் நகக்கணுவை மென்மையாக வைத்து கொள்ள,
10 - 15 நிமிடங்கள்அதை வெதுவெதுப்பான வெந்நீரில் ஊற வைக்கவும். இதற்கு சிறந்த மாற்று வழிநகக்கணு நீக்கி பயன்படுத்துவது தான். பின்பு உங்கள் கையில் சிறிது"மாய்ஸ்ச்சரைசர்" பயன்படுத்தி, ஒரு 15 நிமிடங்கள் பற்றியிருக்கும் படிபடலத்தை வைத்து நகத்தை போர்த்தி விடவும்.
இவ்வாறு செய்வதால், நகக்கணு மிருதுவாகும் மற்றும் ஈரப்பதம் கிடைக்கும்.
கெட்டு போன நகக்கணுக்களை நீக்க "க்யூட்டிகிள்" குச்சியை சிறிய வட்டமாகதேய்த்தால், பழைய நகக்கணுக்கள் நீங்கும்.
இதன் பின்பு, நகக்கணுக்கள் சுத்தமாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.
படி # 7
கை கழுவுதல்
நகத்தில் அழுக்கு மற்றும் தூசி எதுவும் படிந்து விடாதபடி, நன்கு கழுவி விடவும்.
பின்பு சிறிது வார்னிஷ் நீக்கியை கொண்டு, மீண்டும் நகத்தை சுத்தப்படுத்தவும், இவ்வாறு செய்வதால் எண்ணெய் பதம் நீங்கும்.
படி # 8
நகத்தில் அடிப்படை பூச்சு
பாட்டிலில் விளிம்பில் உள்ள உபரியை நன்கு துடைத்தி எடுத்து விடவும்.
ஜாக்கிரதையாக 2-3 பூச்சுகளை இடவும்.
இவ்வாறு செய்வதால், பழைய வண்ண வார்னிஷ் துகள்கள் நீங்கி,உங்கள்நகத்தை பாதுகாக்கிறது.
படி # 9
நகத்தின் நுணியிற்கான பூச்சு
நுணி நகத்தில் பிங்க், அல்லது வெள்ளை நிற பூச்சுகளை பயன்படுத்தலாம்.
ஆயினும் க்ரீம் நிற பூச்சு வெள்ளையை விட இயற்கையான தோற்றத்தைஅளிக்கிறது.
நக முனையை சுற்றி வார்னிஷால் கோடு வரைந்து கொள்ளவும்.
முதலில் வரைந்த கோடு நேர் வடிவமாக அமையவில்லை என்றால், அதைசற்று காய வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை நேரான கோடு வரைந்துகொள்ளவும்.
நக வார்னிஷின் அடுத்த பூச்சிற்கு முன், ஏற்கெனவே பூசியது நன்கு காயவேண்டும் என்பது அவசியம்.
கடைகளில் கிடைக்கும் சில வார்னிஷ் பாக்கில், நக நுணியில் பூசிடும் வண்ணம்அமைந்த "ஸ்டிக்கர்" களும் இருக்கும்.
அந்த "ஸ்டிக்கர்களை" பயன்படுத்தினால், நக நுணியின் மீது நேரான கோடுஅமைக்க மிகவும் ஏதுவாக இருக்கும்.
நுணி பூச்சு இன்னமும் சரியாக அமைய, கார்ட்போர்ட் அட்டையை டைமண்டுவடிவில் வெட்டி நகத்தில் அதை வைத்து பூசினால், பூச்சு நகத்தை தாண்டிசருமம் மீது படாமல் தடுக்கலாம்.
படி # 10
வண்ணப்பூச்சு
அடுத்து வண்ண நிற வார்னிஷ் பயன்படுத்தவும்.
ப்ருஷ்ஷில் அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
நிறத்தின் அழுத்தம் கூட்ட வேண்டுமென்றால் 2 அல்லது 3 பூச்சுகள் பூசலாம்.
ஆனால் முதல் பூச்சு நன்கு காய்ந்த பிறகு, இரண்டாம் பூச்சை பூசவும்.
ஃப்ரென்சு மேனிக்யூர் முறையில் பிங்க் மற்றும் வெள்ளை நிறம் தான் சிறந்ததாககருதப்படுகிறது.
படி # 11
நகத்தில் மேல் பூச்சு
மேல் பூச்சு உறுதியானதாகும், மேலும் இது அடிப்படை பூச்சை முழுமையாககாத்து,
நிறத்தையும் பேணுகிறது.
படி # 12
நன்கு காயவிடவும்.
ஃப்ரெஞ்சு மேனிக்யூர் நல்ல பலன் அளிக்க வேண்டும் என்றால், பூச்சு காய்ந்ததாஎன்று பார்பதற்கு முன் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.
பூச்சு காய்ந்துவிட்டதா என அறிந்து கொள்ள, நகத்தின் மீது உங்கள் நாக்கால்லேசாக தடவி பார்க்கவும், வார்னிஷின் சுவை உணர முடிந்தால் இன்னும் அதுகாயவில்லை என்று பொருள்.
இன்னமும் காயவில்லை என்று தோன்றினால், சிறிது நகக்கணு எண்ணெய்விடவும், இவ்வாறு செய்தால், நீங்கள் அணிந்திருக்கும் உடை மீது பூச்சுஒட்டாமல் இருக்கும்.
படி # 13
சுத்தப்படுத்துதல்
நகத்தின் வார்னிஷ் அல்லது பூச்சு ஒன்றுக்கொன்று கலந்து விட்டால், ஏற்கெனவே பூசியதை முற்றிலும் நீக்கி சுத்தம் செய்து, மீண்டும் பூச வேண்டும்.
ஆயினும், நகத்தை சுற்றியுள்ள சருமத்தில் பூச்சு ப்டிந்துவிட்டால், சிறிதுவார்னிஷை னகத்தை சுற்றிலும் பயன்படுத்தவும்.பின்பு நகக்கணு குச்சியுடன்சிறிது பஞ்சு எடுத்துக்கொண்டு, துடைத்து எடுக்கவும்.
படி # 14
வார்னிஷ் பாட்டிலை பத்திரப்படுத்துதல்
பேப்பர் டிஷ்யுவில் கொஞ்சம் வார்னிஷ் நீக்கியை விட்டுக்கொண்டு, பாட்டிலின்முனையை சுத்தப்படுத்தவும்.
இவ்வாறு செய்தால், அடுத்த முறை பாட்டில் மூடி அழுத்தி மூடிக்கொள்ளாமல்தவிர்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக