Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 8 மார்ச், 2019

உறவு சிக்கல்!

மற்ற விலங்குகளை விட மனிதர்கள் வித்தியாசப்பட எமோசனலி அட்டாச்டு என்பதும் ஒரு காரணம். எதிர்பார்ப்பு, ஏமாற்றம், இழப்பு, அங்கிகாரமின்மை போன்றவை நான் என்ற ஈகோவை இல்லாததாக்கும், அந்த நான் என்ற ஈகோ இழந்த தருணம் சுயந்தை இழந்து தற்கொலையோ, கொலையோ செய்யும் மன உழைச்சலுக்கு தள்ளப்படும் விசித்திர உயிரினம் மனிதம்

மாற்று காதல் உருவாக எதோ ஒரு வகை உளவியல் சிக்கல் காரணமாக இருக்கிறது. நாம் அடிமைபடுத்தப்பட்டு இருக்கிறோம், சுதந்திரமற்று இருக்கிறோம், சுயத்தை இழந்து நிற்கிறோம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம், இதுல கொடுமை என்னான்னா பெற்றோர் வீட்டில் கட்டுபெட்டிதனத்துடன் வளர்க்கப்பட்ட பெண், கணவன் வீட்டில் சுதந்திரமாக இருந்தாக் ஆட்டம் ஓவரா தான் இருக்கும் என்பது கண்கூடு, காரணம் அவர்களுக்குள் புதைந்துள்ள ஆழமன ஆசைகள் தான்

மாற்று காதலில் செக்ஸ் மட்டுமே பிரதானமாக இருக்காது என்பது என் புரிதல், அப்படி செக்ஸ் மட்டுமே காரணமாக இருந்தால் அது காதலாகவே இருக்காது, சில மாதங்களில் உடல் கவர்ச்சி அற்று பிரியும் சூழல் ஏற்படும், சிறு வயசு காதல் பெரும்பாலும் தோல்வி அடைய காரணம் இது தான்


முதிர் காதல் கூட பலருக்கு சோதனை முயற்சியாக தான் முடியும், பேய்க்கு பயந்து பூதத்திடன் மாட்டிக்கொண்ட கதையான அனுபவம் தரும், ஒழுங்கா இருப்பவனை சந்தேகபடுறானேன்னு சைக்கோவிடம் மாட்டி நெந்து நூடுல்ஸ் ஆவார்கள், முன் தந்த அனுபவம் காதலை மதிப்பவனையும் தள்ளியே நிறுத்தும், பொஸிசிவ்நெஸ்க்கும், சந்தேகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்

உண்மை தான், செய்த தவறை மறப்பவர்கள், மீண்டும் அதே தவறை செய்ய சபிக்கப்பட்டவர்கள் என்ற தத்துவம் உலகவளவில் பலரால் நடைமுறையில் உணரப்பட்டது, விதிவிலக்குகள் உண்டு, நீ தான் உலகம் என்று காதலித்ததால் பெரும் வலி பட்டு ஒருவள்/ன் மீண்டும் காதலிக்க நேர்ந்தால் அப்படியே தான் காதலிப்பார்கள், சிலரின் பிறப்பியல்பு அப்படி.

உலகம் முழுவதுமே காதல் பெரும் ஆற்றுபடுத்துனராக உள்ளது, சமூக சிக்கல், பொருளாதார நெருக்கடி போன்ற கமீட்மெண்டுகள் காதலில் இருக்காது, சுயநலமற்று நீ சாப்டியா என்ற கேள்வியே பிரதானமாக இருக்கும், கல்யாணம் ஆனவுடன் காதல் காணாமல் போய்விடும், சிறு வாக்குவாதத்திலும் நாம காதலித்த! பொழுது நீ இப்படி இல்ல என்பார்கள், அப்படியென்றால் இப்பொழுது காதலிக்கவில்லை என்று தானே அர்த்தம்.

இந்த உலகம் முற்றிலுமாக இயந்திரதனத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கிறது, எல்லா உறவுகளும் கடமைக்கு நலம் விசாரித்துகொள்கிறனர்கள். கண்ணுக்கு தெரியாத காலம் கூட காசுக்கு விற்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிறர் சந்தோசத்தை கெடுக்க நினைக்க நேரம் ஒதுக்குவதே சைக்கோதனம் தான். ஆனால் சமூக நெருக்குதல் அப்படியான சைக்கோகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக