ஒவ்வொரு உணவு வகைகளுக்கும் தனித்துவமான தன்மை இருக்கும். சில உணவுகள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரும். சில உணவுகள் கல்லீரலுக்கு பலத்தை உண்டாக்கும். சில உணவுகள் முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்கும். ஆனால், உடலில் ஏற்பட கூடிய உள் காயங்கள் மற்றும் வெளி காயங்களை குணப்படுத்த இதுவரை நாம் உணவுகளை அறிந்திருக்க மாட்டோம்.
ஆனால், நம் வீட்டிலே இருக்க கூடிய சின்ன சின்ன காய்கனிகளே இதற்கு போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது உணவில் தொடர்ந்து சேர்த்து கொண்டால் உள் காயங்கள் மற்றும் உள் வலிகள் நிரந்தரமாக குணமடையும்.
மேலும், இந்த வகை உணவுகள் உடலை வலுவடைய செய்து ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். இந்த பதிவில் உள் காயங்கள் மற்றும் உள் வலிகளை தீர்வுக்கு கொண்டு வர கூடிய காய்கனிகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
பே
அன்னாச்சி
ப்ரோமிலைன் என்கிற புரத- செரிமான நொதி இயற்கையாகவே அன்னாச்சி பழத்தில் உள்ளது. அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உள் காயங்கள் மற்றும் உள் வலிகளை மிக குறுகிய நாட்களிலே குணமாக்கி விடலாம். மேலும், வீக்கத்தையும் குறைக்கலாம்.
பருப்பு வகைகள்
பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் வலிகள் மறைந்து போகும். அத்துடன் இவற்றில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து உள் காயங்களை சரி செய்யும்.
பழுப்பு அரிசி
நாம் சாப்பிடும் வெள்ளை அரிசியை விட பழுப்பு நிற அரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் நார்சத்து அதிக அளவில் இருப்பதால் வீக்கம் மற்றும் வலிகளை போக்கும். மேலும், கல்லீரலுக்கு சீரான அளவில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலை வலுவாக்கும்.
திராட்சை
resveratrol என்கிற முக்கிய மூல பொருளை கொண்டது திராட்சை. இவற்றிற்கு இயற்கையிலே உள் காயங்களை குணமாக்கும் தன்மை உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கூடவே திராட்சையில் உள்ள அந்தோசைனின் என்பவை வீக்கத்தை குறைக்கும்.
வெங்காயம்
உங்களுக்கு உள் காயங்கள் மற்றும் உடலில் உள் வலிகள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் வெங்காயத்தை உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றில் இயல்பாகவே இதனை சரி செய்யும் தன்மை உள்ளது. கூடுதலாக உங்களின் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
காளான்
- பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காளானில் நிறைந்துள்ளது. இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து கொள்வதால் உடல் வலிகள் நீங்கும். அத்துடன் உடலில் உண்டாக கூடிய வீக்கங்களும் குறையும்.
செர்ரி
செக்க சிவந்து காட்சி தரும் இந்த செர்ரி பழங்கள் ஏராளமான நன்மைகளை கொண்டது. இதனை சாப்பிட்டு வருவதால் நாம் நினைப்பதை விட பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகும்.
இவை அனைத்திற்கும் காரணம் இதிலுள்ள அந்தோசைனின், மற்றும் ஆஸ்பிரின் என்கிற முக்கிய மூல பொருட்கள் தான்.
அவகேடோ
ஏராளமான பழ வகைகள் இருந்தாலும் இந்த அவகேடோ பழத்திற்கு என்று தனி தன்மை உள்ளது. இதிலுள்ள கேரட்டினோய்ட்ஸ், டோகோபீரல்ஸ் போன்றவை உடல் வீக்கங்களை குறைக்க பயன்படும். மேலும், புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மையை தர கூடும்.
ப்ரோக்கோலி
வைட்டமின் சி, கே மற்றும் நார்சத்துக்கள் கொண்ட ப்ரோக்கோலி உடலில் ஏற்பட்டுள்ள உள் காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும், இவை உள் வீக்கங்களையும் சரி செய்யும் என மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக