நம் புற சருமம், நம் அக ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு கட்டியம் கூறுகிறது. சரியான ஆகாரம், சிறிது உடற்பயிற்சி, மற்றும் அளவான அழகூட்டல் நம்தோற்றத்திற்கும், நம் மனதில் தோன்றும் உற்சாகத்திற்கும் காரணமாகஅமைகிறது.
நம் சருமம் நமக்கு இரு வகைகளில் உதவி புரிகிறது. ஒன்று பாதுகாப்பு (அந்நியநச்சு கிருமி மற்றும் நோயிலிருந்து) மற்றொன்று பெயர்ச்சி (உடலில் உள்ளநச்சுக்களை வெளியேற்றல்). இவ்விரண்டு செயல்களின் பாதிப்பினால் சருமம்சோர்ந்துவிடக்கூடும். இது போன்ற தருணங்களில் வழக்கமாக மேற்கொள்ளும்அழகியல் பராமரிப்புகளை தாண்டி சற்று பிரத்யேக கவனம் நம் சருமம்எதிர்பார்க்கிறது
.
ஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு இது போன்ற தருணங்களில் சரும பாதுகாப்பிற்குவரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி,தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது. ஆதலால்தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாககருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது "டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல்" மற்றும் "டீப் போர் க்ளென்ஸிங்" என்று இருவகையாகவும் கூறப்படுகின்றது.
ஃபேஷியலின் நன்மைகள் என்ன ?
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஃபேஷியல் மிகவும் பயனுள்ளது என்றுஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெய்யிலினால் ஏற்படும் சரும பாதிப்புகள், சருமத்தின் அழுகிய அணுக்கள், முகசுருக்கங்கள், சருமத்தில் மூப்பின்சுவடுகள்,முகத்தில் தோன்றும் தேமல்கள் இவை அனைத்தையும்
போக்கஃபேஷியல் ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என கூறினாலும் மிகையாகாது.
25 வயது தொடங்கும் பொழுது சருமத்தில் வயதின் பாதிப்புகள் தோன்றதொடங்குகின்றன. ஆக இதுவே ஃபேஷியலை தொடங்க சரியான வயது எனலாம். மும்பையை சேர்ந்த பிரபல தோல் மருத்துவர் டாக்டர் அப்ரதிம் கொயெல்அவ்வப்போது செய்யும் ஃபேஷியலால் நாம் உபயோகப்படுத்தும் "ஆன்ட்டி-ஏஜிங்" பொருள்கள் நம் சருமத்தில் ஊடுருவி நல்ல பலனை தர உதவுகிறது என்றுகூறுகிறார்.
இந்திய அழகு கலையின் முன்னோடி மற்றும் ஃபேஷியலில் ஜாம்பவானான"ஷாஹ்னாஸ் ஹூஸைன்" கூறுவதாவது, ஃபேஷியல் சருமத்தின், எண்ணெய்பசையை பராமரிப்பது மட்டும் அல்லாமல், அதில் அமிலம்-காரத்தின் அளவைசெவ்வனே கட்டுப்படுத்துகிறது.
30 வயதிற்கு பிறகு மாதம் ஒரு முறை ஃபேஷியல்செய்கையில், மூப்பு சுவடுகளை நீக்கி, சரும தசைகளை வலுவாகி மிகவும்பொலிவுடன் தோன்ற உதவுகிறது என்பது அவர் கருத்து.
ஒவ்வொரு ஃபேஷியலும் எளிய வழிமுறைகளை பின்பற்றுகிறது. அவைஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
டீப் க்ளென்ஸிங் மற்றும் டோனிங் : க்ளென்ஸிங் என்ற சுத்தபடுத்தும்திரவத்தால், முகத்தை சுத்தபடுத்தும் பொழுது, உடனே முகம் அழுக்குகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றது.இது நன்றாக சருமத்தின் ஆழத்தில் ஊடுருவதால்சருமத்தின் ரத்தஓட்டம் சீராக்கபட்டு, மாசுக்களையும், அழுக்குகளையும் உடனேநீங்க செய்கிறது. இதே நேரம் டோனிங் மூலம் புதிய சரும அணுக்கள் உருவாகிமுகத்திற்கு உறுதியும், நெகிழ்வும் அளிக்கப்படுகிறது.
சருமத்தின் ஆய்வு : சரும வல்லுநர் பிரகாசமான உருபெருக்கி ஒளியின்(மேக்னிஃப்யிங் டார்ச்) மூலமாக உங்கள் சருமத்தை ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை கண்டறிகிறார்.
வெளியேற்றல் : தாங்கள் விரும்பும் ஃபேஷியல் முறையை பொறுத்து, வெளியேற்றும் சாதனம் வேறுபடுகிறது. சருமம் நன்றாக சுவாசிக்கவேண்டி, "ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்" என்ற பொருளால், அழுக்குகள், அழுகிய சருமஅணுக்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. இவ்வாறு செய்கையில், பழையஅழுக்குகள் நீங்கி புது பொலிவும், புத்துணர்வும் சருமத்திற்கு கிடைக்கிறது.இ ந்தமுறையால் அடைபட்ட துவாரங்களை சுத்தபடுத்தி, சருமம் எந்த பாதிப்புக்கும்ஆளாகாமல், பொலிவு பெற ஏதுவாகிறது.
மசாஜ் : ஃபேஷியலின் சுகமான ஒரு பகுதி மசாஜ் ஆகும். ஒரு லயதிற்குட்பட்டுமுகத்தில் புரியும் அழுத்தங்களினால் முக தசைகள் இறுக்கம் தளர்ந்துலேசாகின்றன. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்திலிருந்து கழிவுகளைவெளியேற்றி, முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல் பேணப்படுகின்றது.
ஃபேஸ் மாஸ்க் : வெள்ளையாக்க, உறுதியாக்க, விட்டமின் சி நிறைந்த பலமாஸ்குகள் கிடைக்கின்றன. முகத்தின் உபரி எண்ணெய் நீங்க, துவாரங்கள்இறுக்கமாக, சருமத்தில் ஈரப்பதம் சேர்க்க என மாஸ்குகள் பல விதத்தில்பயன்படுகின்றன. மூலிகை மாஸ்குகளும் புதிய சரும அணுக்கள் உற்பத்திக்குபெரும் உதவி செய்கின்றன.
உங்கள் அழகியல் அட்டவனையை நீங்களே தேர்ந்தெடுங்கள் :
உங்கள் சருமத்திற்க்கு அதிகபட்ச பலனை தரும் ஃபேஷியலை தேர்ந்தெடுப்பது மிகஅவசியமாகும்.
உணர்ச்சியுள்ள மற்றும் அதிக பருக்கள் உள்ள முகத்திற்கு : இது போன்றமுகத்திற்கு ஃபேஷியல் உகந்தது அல்ல, எண்ணெய் பசை உள்ள முகம், உணர்ச்சிமிகுந்த சருமம், பருக்கள் அதிகம் காணப்படும் முகம், மற்றும் "ரோஸாஷியா" போன்ற சரும நிலையை பெற்றவர்கள் ஃபேஷியலை தவிர்த்து முகத்தை நன்குகழுவி சுத்தபடுத்தினாலே போதுமானது என்கிறார் டெல்லியை சேர்ந்த சருமவல்லுநர் டாக்டர் சாருலதா போஸ்.
சாதாரண மற்றும் எண்ணெய் சருமம் : அழகியல் நிபுணர் ஹூஸைன்அவர்களின் கருத்துப்படி, அடிப்படையான பழசாறு ஃபேஷியல் அல்லது ஆக்சிஜன்ஃபேஷியல் முறை உங்களுக்கு பொருந்தும். அடிப்படை சுத்தபடுத்தல் மற்றும்டோனிங் இம்முறையில் சாத்தியமாகும்.
உலர்ந்த சருமம் : கெட்டியான க்ரீம்களை கொண்டு மசாஜ் செய்யபடும்ஃபேஷியலை தேர்ந்தெடுங்கள். இத்தகைய க்ரீம்கள் சருமத்தின் ஆழத்தில்ஊடுருவி, அதற்கு ஈரத்தன்மையை அளிக்கும் என டாக்டர் போஸ் கூறுகிறார்.
ஃபேஷியல் யாரால் செய்யப்படுகின்றது :
ஃபேஷியலில் நன்கு பயிற்சி பெற்ற வல்லுநர்களை கொண்டு தான் செய்து கொள்ளவேண்டும் என்பது டாக்டர் போஸ் பொன்றோரின் கருத்தாகும். அவ்வாறு பயிற்சிபெற்றவர்களால் மட்டுமே முகத்தின் பதம் அறிந்து, சரியான முறையில், தொழில்பக்தியுடன் இப்பணியை செய்ய இயலும் . இவ்வாறு இல்லாமல் அன்னியர்களிடம்ஃபேஷியல் செய்து கொள்ளும் பட்சத்தில், அழுத்தத்தின் வேறுபாட்டால் முகத்தில்மேலும் சுருக்கங்கள் தோன்றும் வாய்ப்புகள் உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அழகியல் வல்லுநர்கள் மட்டுமே சரும பாதுகாப்பில் த்குந்தபயிற்சி பெற்றிருப்பார்கள்.ஆகையால் அவர்களிடம் மட்டுமே, ஈடுபாட்டுடன், தொழில் நேர்த்தியும் காணப்படும்.
கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் :
1) உங்கள் மீது பயன்படுத்தபடும் உட்பொருள்களை அறிந்துகொள்ளுங்கள்.
2) ஏதேனும் பொருளினால் உங்களுக்கு "அலர்ஜி" உண்டா எனதெரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு "அலர்ஜி" இருப்பின், முதலில் சிறிய பகுதியில்மட்டும் அப்பொருளை பயன்படுத்தி ஊர்ஜிதப்படுத்திகொள்ளுங்கள்.
3) இயற்கை பொருள்களை உங்கள் நிபுணர் பயன்படுத்தினால், அவைகள் வாடாதபுதியவைகளாகவும், ஃப்ரெஷ்ஷானவைகளாகவும் உள்ளதா என்உறுதிபடுத்திகொள்ளுங்கள்.
4) முகத்தில் காணப்படும் பருக்களை கிள்ளி எடுக்காதீர்கள், அவ்வாறு செய்தால், முகத்தில் நிரந்தர வடுக்கள் உருவாக வாய்ப்புள்ளது.
5) நீங்கள் செல்லும் அழகு நிலையம் எந்த வித பிணிகளுக்கும் இடம் தராமல்சுத்தமாக பராமரிக்கபடுகிறதா என சோதித்துகொள்ளுங்கள்.
ஃபேஷியல் செய்துகொள்ள ஆகும் செலவினங்கள் :
சிறிய நகரங்களில் அடிப்படை ஃபேஷியல் செய்துகொள்ள ரூபாய் 1300 வரைஆகும். இதுவே பெருநகரங்களில் சற்று கூடுதலாக காணப்படும். ஃபேஷியல்வல்லுநர்கள்களிடம் சென்றாலோ, ஹோட்டல் மற்றும் ரிசார்ட்டுகளிலோகட்டணம் அதிகரிக்கும். மாஸ்க் மற்றும் சீரம்களை பயன்படுத்துகையில்இக்கட்டணம் மேலும் அதிகம் ஆகலாம்.
எவ்வப்போது ஃபேஷியல் செய்துகொள்ளலாம் :
இது தனிநபரை பொருத்து மாறும் விஷயமாகும். நம் சரும அணுக்கள் மாதத்திற்குஒரு முறை புதுப்பிக்கபடுவதால், மாதம் ஒரு முறை ஃபேஷியல் செய்துகொள்வதுசிறந்ததாகும் .குறைந்தபட்சம் வருடத்திற்கு 4 முறை பருவ மாற்றதிற்கேற்ப்பஃபேஷியல் செய்துகொள்வது நன்று. பருக்கள் தோன்ற
தொடங்கும் நேரத்திலேயேஅடிக்கடி ஃபேஷியல் செய்து கொள்வது சருமத்தை சீராக வைத்துகொள்ள உதவும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக