Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 4 மார்ச், 2019

குங்குமம் தயாரிப்பது எப்படி?


Image result for குங்குமம் தயாரிப்பது எப்படி?

தேவையானவை:

1) 
அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2) 
எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)
வெங்காரம்-------------170 கிராம்
4)
சீனாக்காரம்------------65-70 கிராம்
5)
நல்லெண்ணை--------100 கிராம்
6)
ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்

கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .
அத்துடன் வெங்காரம்சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும் 

நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.
கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்குமாறியிருக்கும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில்காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும்நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!

நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல்உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லியவெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும்இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little 
கப்பி.
fine powder -
ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.

இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர்ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக்கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து விற்பனை செய்யலாம்
எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"
கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!" 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை           உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக