Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 30 மார்ச், 2019

நீங்களே செய்யுங்கள்: பேப்பர் பூக்கள்!


தேவையானவை:
  • சார்ட் பேப்பர் – வெவ்வேறு வண்ணங்களில்
  • கத்திரிகோல்
  • பசை
  • பென்சில்


எப்படி செய்வது?
சார்ட் பேப்பரை பூக்களின் அளவுக்கேற்ப நான்கு சதுர துண்டுகளாக வெட்டுங்கள்.
வெட்டிய சதுர துண்டை எடுத்து, முதலில் முக்கோணமாக மடிக்கவும். பிறகு அதை மீண்டும் முக்கோண வடிவில் மடிக்கவும்.





மடித்த முக்கோணத்தின் ஒரு முனைக்கு எதிர் முனையில், இதழ் போல பென்சிலில் ஒரு வளைவை வரையவும்.அதை அப்படியே வெட்டி எடுக்கவும். இதுபோல நான்கு சதுர துண்டுகளை வெட்டவும்.




வெட்டி வைத்ததை பிரித்தால், ஆறு இதழ் பூ கிடைக்கும். நான்கு துண்டிலும் ஆறு இதழ்களில் ஒவ்வொன்றாக குறைத்து, அந்த இதழ்களை வெட்டி எடுக்கவும்.




மீதமிருக்கும் இதழ்களை உள்பக்கமாக பூப் போல குவித்து, பிரிந்துவிடாதபடி பசை போட்டு வெளிப்பக்கமாக ஒட்டவும். இதுபோல் அனைத்து பகுதிகளையும் தயாரிக்கவும்.
இரண்டு இதழ் உள்ள பகுதியை முதலில் வைத்து, பிறகு மூன்று இதழ், நான்கு இதழ், ஐந்து இதழ் என அதைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டே வரவும். இதோ முழுமையான பூ தயார்!

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!