Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஏப்ரல், 2019

1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்

Indian sage Varahamihira predicted water on Mars almost 1500 years ago


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. அப்படி நம் முன்னோர்களின் சாதனைகளில் மறைக்கப்பட்ட ஒன்றுதான் செவ்வாய் கிரகம் தொடர்பான வானவியல் ஆராச்சியாகும்.
வராகமிஹிரர்
சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உலகின் வானவியல் ஆராய்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படும் NASA செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தது. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவை சேர்ந்த ஒருவர் இதனை கண்டறிந்து விட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பதிவில் அவரை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வராஹமிஹிரரின் பங்களிப்பு
வராகமிஹிரர்:

 வராகமிஹிரர் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். மேலும் இவர் கணித அறிஞராகவும், தலைசிறந்த ஜோதிட நிபுணராகவும் விளங்கினார். இவரின் தந்தை ஆதித்யதாசரும் வானவியல் ஆராய்ச்சியாளர்தான். இவர் எழுதிய விண்வெளி மற்றும் பிரபஞ்சம் என்னும் புத்தகம் இன்றைய ஆராச்சியாளர்களை கூட ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.
பஞ்சசித்தானிக்கா
வராஹமிஹிரரின் பங்களிப்பு 
வராஹமிஹிரர் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் கண்டுபிடித்ததை படிக்காத மாணவர்கள் மிகவும் குறைவு என்பதே உண்மை. திரிகோணமிதி என்று அழைக்கப்படும் முக்கோணவியல் சூத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். கணிதவியலை பொறுத்தவரை இவரின் பங்கு என்பது அளப்பரியது ஆகும். இவர் செவ்வாய் கிரகம் தொடர்பாக என்ன கண்டறிந்தார் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.
கிரகங்களின் விட்டம்

பஞ்சசித்தானிக்கா 
வராகமிஹிரர் கிபி 505 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கபித்தகரிடம் இருந்து வானவியல் மற்றும் கணிதவியல் தொடர்பான ஞானத்தை பெற்றார். இவர் தன் ஞானத்தை கொண்டு உருவாக்கிய பஞ்சசித்தானிக்கா என்னும் வானவியல் பற்றிய ஐந்து சட்டங்கள் கிபி 575 ல் வானவியலில் அதிக முக்கியத்துவத்தை

கிரகங்களின் விட்டம் 
பஞ்சசித்தானிக்காவில் சூர்யா சித்தாந்தம் என்னும் ஒரு பகுதி உள்ளது, இந்த வானவியல் விதியானது கிரகங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவுகிறது. இந்த பணியின் மூலம் வராஹமிஹிரர் கிரகங்களின் விட்டத்தை அளவிட்டார். பூமி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் போன்ற கிரகங்களின் விட்டங்களை இவர் துல்லியமாக கூறினார். சூர்ய சித்தாந்தம் சூர்ய மற்றும் சந்திர கிரகணங்களை அளவிட்டதுடன் அதன் நிறம் மற்றும் அளவையும் கண்டறிந்ததது.

செவ்வாய் கிரகத்தின் விட்டம் 
கணக்கிடப்பட்ட விட்டத்தின் அளவின் படி மொத்தம் 3,772 மைல் என கணக்கிடப்பட்டது. தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விட்டம் 4,218 மைல் ஆகும். வராகமிஹிரர் செவ்வாயில் நீர் இருப்பதையும் கண்டறிந்தார்.
செவ்வாய் கிரகத்தின் விட்டம்
செவ்வாய் கிரகத்தின் இரும்பு மற்றும் நீர்
 வராகமிஹிரர் செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு மற்றும் நீர் இருப்பதை கண்டறிந்து கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் இது இப்போது NASA மற்றும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு நாசாவின்மார்ஸ் ரோவர் அதன் மேற்பரப்பில் இருந்து இரும்புதாதில் மோதியது. இதற்கு லெபனான் என பெயர் வைத்தார்கள்.
செவ்வாய் கிரகத்தின் இரும்பு மற்றும் நீர்
சூரியனின் முக்கியத்துவம்
 சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் எப்படி உருவானது மற்றும் அவை எப்படி சூரியனை மையமாய் கொண்டு இயங்குகிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்து கூறியது இவர்தான்.
சூரியனின் முக்கியத்துவம்
சூர்ய சித்தாந்தம் சூர்ய சித்தாந்தத்தின் அசல் புத்தகம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் தனது சொந்த ஆராய்ச்சிகளுக்காக அதிலிருந்து சில குறிப்புகளை மட்டும் எடுத்து கொண்டனர். 
சூர்ய சித்தாந்தம்
வரமிஹிரரின் அசல் புத்தகம் வெளிநாட்டினரால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
பஞ்சாங்கம் தற்போதிருக்கும் சூர்ய சித்தாந்தம் பஞ்சாங்கம் கணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பாஸ்கராச்சாரியார் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இந்த புத்தகம் மூலம்தான் தற்போது விஷேச தினங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கணிக்கப்படுகிறது.

பஞ்சாங்கம்


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக