இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தென்காசியில் இருந்து பண்பொழி
போகும் ரோட்டில், முதலில் தென்படுவது இந்த குத்துக்கல்தான். 30 அடி உயரம் கொண்ட
இந்த கல்லை, அடையாளமாக வைத்து தான், இங்குள்ள கிராமத்திற்கு, குத்துக்கல் வலசை
கிராமம் என்ற பெயர் வந்தது.
இப்பகுதியில்,
வலசை என்ற வார்த்தையில் முடியும் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த குத்துக்கல்
வலசை பிரபலம். வலசை என்பதற்கு, வரிசை, பகுதி என்று அர்த்தம். ஒரு காலத்தில், இந்த
கல்லுக்கு பக்கத்திலேயே, இதே போல சிறிய அளவில் கற்கள் இருந்ததாகவும்,
காலப்போக்கில் அவைகள் காணாமல் போக, இப்போது இந்த ஒரு கல்தான் மிஞ்சி இருப்பதாகவும்
கூறுகின்றனர்.
இந்தக்
குத்துக்கல் விழுந்து விடுவது போல காணப்பட்டாலும், காலம் காலமாக விழாமல்
இப்படியேதான் காணப்படுகிறது. இயற்கை உருவாக்கிய அதிசயமான இந்த கல், இன்னும், பல
காலம் தாக்குப் பிடிக்கும் என்பது, இயற்கை ஆர்வலர்களின் கருத்து.
இயக்குனர்
பாலசந்தரின் பல படங்களில், இந்த குத்துக்கல் இடம் பெற்றிருக்கும்.
இயற்கை
உருவாக்கியது போல இன்னொன்றை செயற்கையாக உருவாக்குவது கடினம். அப்படியே
உருவாக்கினாலும், அது இயற்கைக்கு நிகராக இருக்காது. ஆகவே, இயற்கை நமக்கு கொடுத்த
பொக்கிஷம் போன்ற இந்த குத்துக்கல்லை, நாம் ரசித்தது போல, அடுத்த தலைமுறையும்
ரசிக்க செய்வோம்.
குத்துக்கல்வலசை
(Kuthukalvalasai)..
திருநெல்வேலி
மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமாகும். குத்துக்கல்வலசை
கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும்
சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது.
குற்றாலம்
அருவிகள் இக்கிராமத்தின் அருகாமையில் உள்ளதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை
தரும் ஒரு நகரமாக தென்காசி அமைந்துள்ளது. இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர்
போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.
தென்காசி
புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் இங்கு (மதுரை ரோட்டில்) அமைந்துள்ளது.
இவ்வலுவலகம் 2013 வருடம் முதல்வர் ஜெயலலிதா துவங்கி வைத்தார்.
குத்துக்கல்
வலசை அருகிலுள்ள சுற்றுலா தலங்கள் :
குத்துக்கல்
- குத்துக்கல்வலசை (தென்காசியிலிருந்து திருமலைக் கோவில் செல்லும் சாலையில்
உள்ளது).
உலக
அம்மன் கோவில் (தென்காசி).
குற்றாலம்
அருவி மற்றும் மலை பகுதி.
மௌன
சாமி மடம் (குற்றாலம்).
திருமலைக்
கோவில்.
குண்டாறு
நீர்த் தேக்கம் (செங்கோட்டை).
அடவிநயினார்
நீர்த்தேக்கம் (மேக்கரை).
அச்சங்கோவில்
(கேரள மாநிலம்).
ஆரியங்காவு
(கேரள மாநிலம்).
கோயில்கள்
:
தென்காசி
காசி விஸ்வநாதர் திருக்கோயில்.
உலக
அம்மன் கோயில்.
குலசேகரநாதர்
கோயில்.
திருமலைக்
கோவில்.
குத்துக்கல்
ராமர் கோயில்.
குத்துக்கல்
அனுமான் கோயில்.
குற்றாலநாதர்
திருக்கோவில், குற்றாலம்.
அருகே
இருக்கும் கிராமங்கள் :
அய்யாபுரம்.
கனக்கபிள்ளவலசை.
இலத்தூர்.
அகரகட்டு.
இலஞ்சி
உட்பட பல கிராமம் உள்ளன.
போக்குவரத்து
:
தொடருந்துகள்
:
சென்னையிலிருந்து
செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு புகைவண்டி தினமும் உண்டு.
மதுரையிலிருந்து
செங்கோட்டை (வழி - விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம்,
சங்கரன்கோவில், கடையநல்லூர்) வரையான புகைவண்டி தினசரி காலை, மதியம், மாலை என
மூன்று வேளைகளும் உள்ளது.
திருநெல்வேலியிலிருந்து
செங்கோட்டை (வழி - பேட்டை, சேரன்மாதேவி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம்,
ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம்) வரையான புகைவண்டி தினசரி காலை, மாலை என இரண்டு
வேளையும் உள்ளது.
பேருந்துகள்
:
இங்கிருந்து
திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், பாபநாசம்,
செங்கோட்டை, சங்கரங்கோவில், கோவில்பட்டி, இராஜபாளையம், மதுரை, தேனி, குமுளி,
விருதுநகர், திருப்பூர், சென்னை, கோயம்புத்தூர், எனத் தமிழ்நாட்டின் ஏனைய
பகுதிகளுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் முக்கிய
நகரங்களுக்கும், பெங்களூரு, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில
நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
வானூர்தி
:
இவ்வூருக்கு
அருகிலுள்ள விமான நிலையங்கள்:
மதுரை
(சிற்றுந்தில் 3 மணி நேர பயணம்)..
திருவனந்தபுரம்
(சிற்றுந்தில் 5 மணி நேரம்)..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக