இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
தமிழகத்தில்
ஸ்ரீலலிதாம்பாள் எனும் திருநாமத்துடன் அம்பிகை குடியிருந்து அருள்பாலிக்கும் தலம் திருமீயச்சூர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது , இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள்
உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின்
அவதாரத் திருத்தலம் இது!
திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என
எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர்.
சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர். காரணம்… இந்தத் தலத்தின்
நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!
உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம்
செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப்
பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும். அப்பேர்ப்பட்ட, சக்தியும்
சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!
பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின்
திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக
அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி
வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள். இறுதியில் அவனை அழித்தொழித்தாள். ஆனாலும்
அவளது உக்கிரம் தணியவில்லை.
இந்தக் கோபம், பூமிக்கும்
மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம்
தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு
வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’
எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின்
கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து, பாடினர்.
‘அடடா… இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப்
பார்க்கவேண்டும்?! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம்
எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில்
வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது?!’
என யோசித்தாள்.
எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட… அவளது உக்கிரம்
காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே
தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.
இதோ… இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா
சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங்
களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள். இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில்,
ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!
வருடம் முழுவதும், இங்கே தேர்க்கூட்டம், திருவிழாக் கூட்டம்தான்!
ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை
நடைபெறுகிறது. நவராத்திரியில்… விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும்,
வைகாசி – பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண,
வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள்
என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு
முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க… குளம் போல் ததும்பியிருக்கும்
நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!
மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய
க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்;
அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்,
ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக