இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சுற்றுலா பிரியர்களே! வாங்க வாங்க... மாதத்தின் எல்லா நாட்களும் மகிழ் சுற்றுலா செல்ல எங்கெல்லாம் போகலாம்னு தெரிஞ்சிக்கலாம்.
உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் ஓடியாடி பாடி மகிழ்ந்து உணர்ந்திட இந்த இடங்களுக்கு செல்லுங்கள். அதற்கான சுற்றுலா வழிகாட்டி கட்டுரை இது.
உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
சில்கா
சில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய கடற்கரைக்காயலாக உள்ளதால் இந்த ஏரிக்கு இது கூடுதல் பெருமையை சேர்கிறது.
ஒடிசாவில் உள்ள இந்த கடற்கரைக்காயல் மிகவும் புகழ் பெற்ற தலமாக விளங்குவதால் சுற்றுலாப் பயணிகளிடம் இது மிகப்பெரிய ஈர்ப்பாக உள்ளது. தலைநகரமான புபனேஷ்வரிலிருந்து 81 கி.மீ. தொலைவில் உள்ள சில்கா, கஞ்சம் மாவட்டம், குர்தா மற்றும் பூரிக்கு ஆகிய இடங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
தியூ
தியூ எனும் எனும் இந்த சிறு தீவு குஜராத் மாநில சௌராஷ்டிரா (கத்தியவாட்) தீபகற்ப பகுதியின் தென்முனையில் வீற்றிருக்கிறது. ரம்மியமான தென்னை மரங்கள் பின்னணியில் அணிவகுத்திருக்க, அரபிக்கடலின் அழகிய மணற்கடற்கரைகளை கொண்ட இந்த தீவு ஒரு சொர்க்கபுரி போன்று இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.
நாசிக்
மும்பையிலிருந்து 180 கி.மீ தூரத்திலும் புனேயிலிருந்து 200 கி.மீ தூரத்திலிருந்து இது உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் பிரசித்தி பெற்ற நப்பா பள்ளத்தாக்கு இங்குதான் அமைந்துள்ளது.
நாசிக் நகருக்கு வெகு அருகில் இருக்கும் திரிகம்பேஸ்வர் கோயில் இங்குள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். முக்திதம் என்ற மற்றொரு கோயில் அங்குள்ள ஜோதிர்லிங்கங்களுக்காக இந்தியா முழுவதுமே அறியப்பட்ட ஒன்றாகும்.
குல்மார்க்
குல்மார்க் 2730 மீட்டர் உயரத்தில்,ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்களால் 1927ல் கண்டுபிடிக்கப்பட்டது. குல்மார்க் என்றால், மலர் மைதானம் என்று பொருள்.
அழிக்கும் தொழிலை செய்யும் இந்து கடவுளான சிவபெருமானின் மனைவியான கௌரியின் நினைவாக, குல்மார்க் முந்தைய காலத்தில்,கௌரிமார்க் என்று அழைக்கப்பட்டது. இவ்விடத்தின், அழகு, சரிவான புல்வெளிகள், அமைதியான சூழல் ஆகியவற்றில் மயங்கிய, காஷ்மீரின் கடைசி மன்னரான ராஜா யூசுஃப் ஷா சக் என்பவரால், தற்போது குல்மார்க்என்று அழைக்கப்படுகிறது.
பெரியார் காட்டுயிர் சரணாலயம்
பெரியார் காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய இயற்கைப்பூங்கா என்றழைக்கப்படும் இந்த வளம் பொருந்திய வனப்பகுதி தேக்கடியின் பிரதான சுற்றுலா அம்சமாகும். கேரள மாநிலத்தின் காட்டுச்சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை மிகப்பெரிய அளவில் மாற்றி அமைத்துள்ள பெருமையை இந்த சரணாலயம் பெற்றுள்ளது.
பிருந்தாவன்
கங்கை நதிக்கரையில் கிருஷ்ணர் தனது இளமைப்பருவத்தை கழித்த ஸ்தலமாக கருதப்படும் இந்த விருந்தாவன் இந்துக்களுக்கு விருப்பமான யாத்ரீகத்தலமாகும்.
இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் கோபியர் சேலைகளை திருடியதாகவும், மற்றும் ராதையுடன் தனது ராசலீலைகளை நிகழ்த்தியதாகவும், தெய்வீக நடனங்கள் புரிந்ததாகவும், பல அசுரர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே 5000 கோயில்களுடன் புராணிக முக்கியத்துவம் கொண்ட இந்த நகரம் ஒரு பெரிய யாத்திரை நகரமாக ஸ்தலமாக திகழ்வதில் வியப்புமொன்றுமில்லை.
ரத்னகிரி
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த ரத்னகிரி நகரம், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மற்றுமொரு சிறிய அழகிய துறைமுக நகரமாகும்.
ரிஷிகேஷ்
டெஹ்ராடூனில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான ரிஷிகேஷ், தேவபூமி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள்.
ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி கோவிலையும் பயணிகள் காணலாம். சிவன் கோயிலான இது கங்கை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
படகு சவாரிக்கு ஏற்ற இடமாகவும் இது விளங்குகிறது. மேலும் நீல்கந்த் மகாதேவ் கோவில், கீதா பவன், ஸ்வர்க ஆசிரம் ஆகியவை ரிஷிகேஷில் உள்ள மற்ற புகழ்பெற்ற இடங்களாகும்.
மான்
வீரதீர பயணங்கள் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், பயணங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக மான் என்ற பகுதி அமைந்துள்ளது. உண்மையாகவே இந்த உலகத்தின் அமைதியை மான் பகுதியில் அனுபவிக்கலாம். ஏனெனில் மான், நகர வாழ்க்கையின் நரகச் சூழல்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இந்த இடத்திற்கு சென்றாலே ஒரு புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம்.
ஸ்ரீநகர்
'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அழகிய நகரமாகும். ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும்.
ஷில்லாங்
ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் அழகான மலை உச்சிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஷிலாங் மிகுந்த எழிலுடன் விளங்குகிறது. எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, ஷில்லாங் மலைச்சிகரம், லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி, போலீஸ் பஜார் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.
மே மாதம் செல்லவேண்டிய இடங்கள் ஊட்டி
ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்று கூட காணலாம். ஊட்டி , இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல இருப்பதாக பல சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர்.
பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது
காங்க்டாக்
சிக்கிம் மாநிலத்தில் முக்கிய நகரங்கள் உட்பட பெரும்பாலும் எல்லா நகரங்களுமே சரியான வரலாற்று ஆதாரங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. காங்க்டாக் நகரத்திற்கும் அதிகம் வரலாற்றுக்குறிப்புகள் ஏதுமில்லை.
காங்க்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1437 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கிறது.
கசௌலி
19ம் நூற்றாண்டில் கூர்க்கா மண்டலத்தின் முக்கிய அங்கமாக கசௌலி மாறியது. பின்னர் இந்த இடம் ஆங்கில அரசாங்கத்தால் ஒரு முக்கியமான ராணுவக்கேந்திர நகரமாக மாற்றப்பட்டது.
இயற்கை அம்சங்கள் நிறைந்த சூழலின் மத்தியில் வீற்றுள்ள இந்நகரத்தில் கிறிஸ்ட் சர்ச், மங்கீ பாயிண்ட், கசௌலி புரூவரி, பாபா பாலக் நாத் கோயில் மற்றும் கூர்க்கா ஃபோர்ட் ஆகிய இதர சுற்றுலா அம்சங்களும் காணப்படுகின்றன.
1
2
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள். வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக