இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பன்னிரு திருமுறைகளுள் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகங்கள்
"திருக்கடைக்காப்பு " என்றும் , திருநாவுக் கரசு சுவாமிகள்ள அருளிய பதிகங்களை
"தேவாரம் " என்றும், சுந்தரமூர்த்தி சுவாமி அருளி பதிகங்களை "திருப்பாட்டு"
என்றும் கூறுவது மரபாக இருந்து வந்துள்ளது.
தேவாரம் திருமுறை இரண்டையும் சேர்த்து " தேவாரத் திருமுறை " எனக் கூறுகிறோம்.
திருமுறை எனும் சொல் சிவமாம் தன்மையைப் பெறச் (முக்தி பேறு) செய்யும் நூல் என்பது பொருளாகும். (திரு ... முக்திச் செல்வம், முறை .. நூல் ) சிவபரம் பொருளை அடைய உதவும் நூலே திருமுறை எனப்படும்.
திருமுறைகளுள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் அருளிய பாடலகளைத் " தேவாரம் " என்று அழைக்கின்றோம். இவர்களை மூவர் முதலிகள் என்று போற்றும் வழக்கு இன்றும் உள்ளது.
தே / தேவர் / சிவபெருமானார், ஆரம் / மாலை, பரம் பொருளாகிய சிவபெருமானாருக்கு வாடாத பாமாலையாக சூட்டப்படுவது என்று ஒரு பொருள்.
தே ... சிவபெருமானார், வாரம் ... அன்பு, சிவபெருமானாரி டத்து அன்பினை விளைவிப்பது என்று பொருள், வாராய் (அன்புடன்) வணங்கிவார் வல்வினை மாயுமே " என்பது திரு ஞானசம்பந்த சுவாமிகளின் திருவாக்கு ஆகும்.
தில்ைல சிற்றம்பலத்தில் வைக்கப்பட்டிருந்த திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் செல் அரித்திருந்தமை உணர்ந்த முதல் குலோதுங்கள் (கி.பி.1070.. 1120) படைத்தவர்களுள் ஒருவனான "மணவிற்கூத்தன் காளிங்கராயன் " என்பவன் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்தான் என்பதை தில்லை கோவில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
திருஞான சம்பந்தர் காலத்தில் அவருடனே இருந்த அவர் பாடல்களையெல்லாம் ஓலைச் சுவடிகளில் எழுதியவர் " சம்பந்த சரணாலயர்" ஆவார்.
இவ்வளவு அருமையும் பெருமையும் உடைய திருமுறைப் பாடல்களைத் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் நலம் பெற வேண்டும்.
திருமுறைப் பாடல்கள் யாவும் அறிவுகொண்டு பாடப்பட்டவை இல்லை. இறைவருடைய அருளால் பாடப் பட்டவை என்பதை பலகாலும் எழுதியுள்ளோம்.
திருமயேந்திரப் பள்ளிப் பதிகத்தில் திருஞானசம்பந்தர் அருளியுள்ள ஒரு பாடல் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
"வம்புலாம் பொழிலணி மயேந்திரப்பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன்சொல்
நம்பரம் இதுஎன நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே." திருமுறை 3/31
கருத்து ; நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த மயேந்திரப் பள்ளியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானாருடைய வீரக் கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞான சம்பந்தன் அருளிய இத்தலத்து பதிகத்தை நம்முடைய கடமை என்ற மன உறுதியுடன் வாயினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்ட அழைக்க உயர்ந்த இடத்தினை / சிவலோகத்தினை அடைவர்.
திருஞானசம்பந் சுவாமிகள் பின்னால் சுமார் நூறு அல்லது நூற்றுஐம்பது ஆண்டுகட்கு பின்னால் அவதரித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். இப்பெருமானார், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய தமிழ் வேதப் பாடல்களை பாடுவதை தமது கடமையாய் கொண்டிருந்தார். என அவரே அருளியுள்ள பாடல்களால் நாம் உணர முடிகின்றது.
"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவிலுக் கரையனும்
பாடிய நற்றமமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை"
ஞானசம்பந்தரும் , நாவுக்கரசரும் அருளிய திருமுறைப் பாடல்களை எத்தனை முறை பாடினாலும், இறைவர் கேட்டு மகிழ்பவர் என்பதே இப்பாடலின் கருத்து.
சுந்தரர் அருளிய கேதாரப் பதிகத்தில் , நாவுக்கரசருக்கும், தமிழ் ஞான சம்பந்தருக்கும் தான் அடித்தொண்டன் என்று கூறியுள்ளார்.
"நாவின்மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்".
ேமலும் நாளும் இன்னிசையால் தமிழ் பாடலை எல்லா இடங்களிலும் பரவச் செய்த திருஞான சம்பந்த சுவாமிகளுக்கு அவருடைய பாடலுக்கு இரங்கி, உலகவர் காணப் பொன்னாலாகிய தாளம் அளித்தார் சிவபெருமானார் என்று போற்றுகிறார் சுந்தரர்.
" நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்
தன்மையாளன்................. "
இவற்றையெல்லாம் காணும் பொழுது, சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமக்கு முன்னே வாழ்ந்து பதிகப் பெருவழி காட்டிய ஞானசம்பந்தர் மற்றும் நாவுக்கரசர் பாடல்களை உள்ளம் ஒன்றி பாடியவர் என்று உறுதியாக அறிய முடிகின்றது.
வானிலிருந்து தேவர்கள் வந்து சுந்தரரை எதிர் கொண்டு அழைத்து சென்று சிவனுலகத்தி்ல் சேர்த்தனர் என்பதையும் சுந்தரர் பாடல் மூலமே அறிய முடிகின்றது.
"இந்திரன் மால் பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம்
வந்து எதிர் கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து
மந்திரமாமுனிவர் இவனார்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே."
கருத்து ; இந்திரன், திருமால், பிரமன், எழுச்சி மிகுந்த தேவர்கள் ஆகிய எல்லோரும் இம்மண்ணுலகிற்கு வந்து என்னை (சுந்தரரை) சிவனுலகிற்கு அழைத்தார்கள். யானையைக் கொண்டு வந்து என்னை அதன் மேல் ஏறறி அழைத்துச் சென்றார்கள்.அச்சமயம் வானுலகில் இருந்த மந்திரங்கள் ஓதும் முனிவர்கள் " இவன் யார்? " என்று வினவ , இவன் நம் தோழன் , ஆரூரான், என்னும் பெயருடையான் என்று திருவாய் மொழிந்தார் சிவபெருமான்.
ஞானசம்பந்த்ர் மற்றும் திருநாவுக்கரசர் பாடிய தமிழ் வேதப் பாடல்களைப் பாடி பரவிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் பெற்ற பெரும் பேற்றிலிருந்து தமிழ் ேவதப் பாடல்கள் யாவும் சத்திய வாக்கு என்பதையும், மண்ணுலக மக்களின் வாழ்விற்கு ஒப்பற்ற வழித்துணை என்பதையும் அழுத்தமாக மனதில் கொள்ள வேண்டும்.
ஒரு முறை திருமுறை ஓதினால் மறுமுறை கருவறைப் புகுதல் இல்லை ( மறு பிறப்பு இல்லையாகும்).
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக