இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ஐவர்மலை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கில்
உள்ளது.
சண்முக நதியின் மேற்கு கரையில் வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் இடதுபக்கம்
பிரிந்து கொழுமம் செல்லும் வழியில் பாப்பம் பட்டி பிரிவுக்கு அருகில்சாலையின் இடது
புறம் பிரிவுப்பாதையில் செல்லவேண்டும்.
பிரிவின்
முகப்பில் ஆர்ச் கட்டப்பட்டு இருக்கும் இதன் வழியாக சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்
இரண்டு மலைகள் இருக்கும் இந்த இரு மலைகளில் பாதையின் கிழக்கில் உயர்ந்த மழையும் அதன்
எதிர்புறம் சாலையின் மறுபுறம் மேற்கில் உள்ள மலையே அயிரை மலையாகும்.
இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அயிரை மலை என்று
சங்க இலக்கியங்களிளும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறது. அயிரை என்ற சொல்லுக்கு
மீன், கொற்றவை, என்று பொருள்கள் உண்டு.
இம்மலையின் இடைநிலையில் யக்க்ஷி கோவில் உள்ளது.
இது ஒரு
சமணப் பள்ளியாக இருந்துள்ளது. இங்கு சமண சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. இயக்கி, யக்க்ஷி
உருவங்களும் காணப்படுகின்றன. சமணர்களின் இருபத்து நான்கு தீர்த்தங்கர்களில் இருபத்தி
மூன்றாவது தீர்ந்தங்கராரான பார்சுவநாதர் சிற்பம் உள்ளது.
மானாக்கியர்
இச் சிறபங்களைச் செய்துள்ளார். இங்குள்ள தெய்வத்தை ஸ்ரீ அயிரை மலை தேவர் என்று குறித்து
உள்ளனர். இச்சமனத் தீர்த்தங்க்கர் உருவங்களை காலப்போக்கில் மகாபாரதக் கதையின் தாக்கம்
வலுப்பெற்ற காலத்தில் இவர்களை பாண்டவர்கலாகவும் அழைக்கத் தலைப்பட்டனர்.
துரோபதை
அம்மன் கோயிலுக்கு மேல் உள்ள பகுதியில் சுமார் 30 அடி நீளத்திற்கு 6 பகுதிகளாகப் பிரித்து
16 சமண தீர்த்தங்கரர் உருவங்கள் உருவங்கள் செதுக்கப்பட்டு உள்ளன.
பாற்சுவ
நாதரைத் தவிர மற்றவை அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டு உள்ளது. பார்சுவனாதருக்கு நாகம்
குடை போல் அமைய மற்றவர்களுக்கு முக்குடை உள்ளது இயக்கன், இயக்கி உருவங்கள் சாமரம் வீசும்
நிலையில் செதுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே
வெட்டப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டின் மேல் ஒரு தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப் பட்டு
உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டாகலாம். ஒவ்வொரு சிற்பமும் சுமார் 18 அங்குலம் அதாவது
ஒன்றை அடி உயரம் உள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக