Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், திருநெல்வேலி Empty அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், திருநெல்வேலி



தொடர்புடைய படம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..இப்பொழுதே இணைந்துகொள்





மூலவர் : உச்சிஷ்ட கணபதி
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : திருநெல்வேலி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்: 



திருவிழா: 

விநாயகர் சதுர்த்தி. 

தல சிறப்பு: 

உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. 

திறக்கும் நேரம்: 

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 

முகவரி: 

அருள்மிகு பெரிய கணபதி திருக்கோயில், புது பைபாஸ் ரோடு அருகே, திருநெல்வேலி 627 001. 

போன்: 

+91 94433 68596, 94431 57065 

பொது தகவல்: 


ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த கோயில் இது. ராஜகோபுரத்தைக் கடந்ததும், நீண்ட வெட்டவெளியைக் கடந்து கோயிலுக்குள் செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் சிலைகள் ஏதும் இல்லை.



பிரார்த்தனை 

இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.


நேர்த்திக்கடன்: 

விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள். 

தலபெருமை: 

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மருதீசரே மூலவராக உள்ளார். விநாயகப் பெருமான் மிகப்பெரிய வடிவில் பரிவார மூர்த்தியாக அருள் செய்கிறார். நெல்லையில் விநாயகரை மூலவராகக் கொண்டு கொடிமரத்துடன் கூடிய இரண்டு விநாயகர் கோயில்கள் உள்ளன. ஒன்று நெல்லை டவுனிலுள்ள சந்திப்பிள்ளையார் கோயில், மற்றொன்று நெல்லையில் இருந்து ஐந்து கி.மீ. தூரத்திலுள்ள பேட்டை சர்க்கரை விநாயகர் கோயில். ஆனால், உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட அளவில் மிகப்பெரிய கோயில் இது மட்டுமே. கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில் சுவர்களின் நீள, உயரத்தைப் பார்த்தாலே இது புரியும்.

கருவறையில், விநாயகப் பெருமான் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்து காமரூபராக காட்சியளிக்கிறார். இதற்கு சில விளக்கங்கள் தருகிறார்கள். ஒரு பெண், குழந்தை பெற்று தாய்மையடைவதை பெருமையாகக் கருதுகிறாள். தாய்மைக்குப் பிறகு, அந்தக் குழந்தை நல்லவனாக, வல்லவனாக, பெற்றோருக்கு கீழ்ப்படிந்தவனாக நடக்க ஆசை கொள்கிறாள். விநாயகர், பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்திருப்பதை தரிசிப்பதன் மூலம், அசுர குணமுள்ள குழந்தைகள் பிறப்பது தடை செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகிறது. (சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலிலும் இத்தகைய அமைப்பில் ஒரு விநாயகர் சிலை இருக்கிறது). தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் விநாயகருக்கு இத்தகைய அமைப்பு இல்லை. விநாயகரை அடுத்து நெல்லையப்பருக்கு சிறிய சன்னதி உள்ளது.

திருப்பணி: அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் திருப்பணி சுவாமி சங்கரானந்தா தலைமையிலான கமிட்டியால் செய்யப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக சிதிலமடைந்துள்ளதால், இந்த அபூர்வக் கோயிலை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் 65லட்சம் ரூபாய்க்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.


தல வரலாறு: 

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி. அவர் பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் இருக்க, ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள கோலம் அபூர்வமானது. இதுவே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும். வடமாநிலங்களில் உச்சிஷ்ட கணபதிக்கு விளக்கம் தரும் போது, "பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்தவர்' என்பர். இவரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.


சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது மட்டுமே. 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக