இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
டெபிட்
அல்லது கிரடிட் கார்ட்களில் 16 இலக்க எண் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில்
முதல் ஆறு இலக்கங்கள் பி.ஐ.என் எனப்படும் பேங்க் ஐடண்டிபிகேஷன் நம்பர். வங்கியை
அடையாளப்படுத்தும் எண். அந்த வங்கி அதன் பின் வருகின்ற பத்து இலக்க எண்களை 000 000
0001 முதல் 999 999 9999 வரையிலான எண்களால் நிரப்பிக் கொள்ளலாம்.
அதாவது நூறு கோடி
கார்ட்கள் வரை ஒரு வங்கி கார்ட்களை வினியோகிக்க முடியும். இதை பின் ரேன்ச் ( BIN
Range )என்பார்கள்.
கார்டை
வினியோகிக்கும் இஷ்யூவர் வங்கிகள் (வழங்குநர்கள்) முதலில் இந்த பி.ஐ.என் எண்ணை
பேய்மெண்ட் சிஸ்டத்தோடு இணைப்பார்கள். அப்போது தான் பேய்மெண்ட் சிஸ்டம் இந்த
வங்கிகளுக்கு பரிவர்த்தனைகளை சரியாக அனுப்ப முடியும்.
அதே
போல பரிவர்த்தனைகளை ஆரம்பித்து வைக்கின்ற அக்யூரர் ( வாங்குபவர்) வங்கிகளும்
இப்படி ஒரு பி.ஐ.என் எண்ணை பேய்மெண்ட் சிஸ்டத்தோடு இணைப்பார்கள். ஆனால் அவர்களுடைய
தேவை வேறு. உதாரணமாக ஒரு பி.ஓ.எஸ் மெஷினில் பல இஷ்யூயிங் வங்கிகளுடைய கார்ட்கள்
பயன்படுத்தப்படும். இவற்றையெல்லாம் பேய்மெண்ட் சிஸ்டத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்படி அனுப்பும் போது எங்கிருந்து இந்த பரிவர்த்தனைகள் வந்தன என்பதைக் குறித்து
வைத்துக்கொள்ள இந்த அக்யூரர் வங்கியின் பி.ஐ.என் எண் பயன்படும்.
இந்த
தகவல்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் சென்று கொண்டே இருக்கும். இவை
குறியீடுகளாக, எண்களாக, மெசேஜ்களாக என பல வடிவங்களில் செல்லும். அப்படி தகவல்களை
அனுப்பும் டிஜிடல் கடிதங்களுக்கு டேட்டா எலிமெண்ட்ஸ் (DE – Data Elements) என்று
பெயர். இந்த தகவல் பரிமாற்றங்கள் எல்லாம் ஐ.எஸ்.ஓ (ISO) எனப்படும் ஒரு
நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் தான் இருக்கும்.
எந்த
ஒரு நபருடனும் உரையாட அவரது மொழி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
இருவருக்கும் தெரிந்த ஒரு பொது மொழி இல்லாமல் தகவல் பரிமாற்றம் சாத்தியமில்லை. அதே
போல தான் இந்த பேய்மெண்ட் சிஸ்டத்திலும் ஒரு பொதுவான மொழி தேவைப்பட்டது. அந்த
தேவைக்காக உருவானது தான் இந்த ஐ.எஸ்.ஓ (இண்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் ஆஃப் ஆர்கனைசேஷன்
). உலகின் பெரும்பாலான பேய்மெண்ட் சிஸ்டம் இன்று பயன்படுத்தும் மொழி ஐ.எஸ்.ஓ தான்.
சில பேய்மெண்ட் சிஸ்டங்கள் வேறு வடிவங்களையும் பயன்படுத்துகின்றன.
பி.ஓ.எஸ்
மெஷின் தன்னுடைய வங்கிக்கு தகவலை அனுப்பும் போது ஐ.எஸ்.ஓ ஃபார்மேட்டில்
அனுப்புகிறது. அது அங்கிருந்து பேய்மெண்ட் இடைமுகத்துக்குச் செல்லும் போது ஐ.எஸ்.ஓ
ஃபார்மேட் தொடர்கிறது. அங்கிருந்து அது இஷ்யூயர் வங்கிக்குச் செல்லும் போது
அங்கும் ஐ.எஸ்.ஓ மொழியே இருக்கிறது. அதே பயணம் மீண்டும் வழங்குநர் வங்கியிலிருந்து
திரும்பி பி.ஓ.எஸ் மெஷினுக்கு வரும் வரை நிடிக்கிறது . இது வங்கிகளும், பேய்மெண்ட்
சிஸ்டமும் ஏற்கனவே ஒத்துக்கொள்கின்ற வழிமுறையாகும்.
பேய்மெண்ட்
டொமைன் பற்றி படிக்க வேண்டுமெனில் இந்த ஐ.எஸ்.ஓ ஃபார்மேட் தகவல் பரிமாற்றத்தைப்
புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒரு சில முக்கியமான ஐ.எஸ்.ஓ பீல்ட் களைப்
பற்றி சொல்கிறேன். எம்.ஐ.டி (MIT – Message Type Indicator மெசேஜ் டைப்
இண்டிகேட்டர்) என்பது ஒரு ஃபீல்ட். அதாவது அந்த பரிவர்த்தனை எப்படிப்பட்டது
என்பதைக் குறிப்பிடும் இடம் இது. இதை டேட்டா எலிமெண்ட் 000 (DE 000) என்று
சொல்வார்கள். இது மிக மிக முக்கியமான தகவல்.
உதாரணமாக
பி.ஓ.எஸ் மெஷின் இந்த டேட்டா எலிமெண்டில் 0100 எனும் தகவலை வைத்து அனுப்பினால் இது
ஒரு பர்ச்சேஸ் பரிவர்த்தனை (Purchase Transaction) என்று அர்த்தம். இதைப் பெறுகிற
அக்யூரர் வங்கி அதை அப்படியே பேய்மெண்ட் சிஸ்டத்துக்கு அனுப்பும், அது பின்னர்
வழங்குநர் வங்கிக்கு செல்லும். அந்த வங்கி எல்லாவற்றையும் சரிபார்த்து, சரியாய்
இருக்கிறது என கண்டுகொண்டால், 0110 என ஒரு தகவலை திருப்ப அனுப்பும். ‘உன் தகவல்
கிடைத்தது, இதோ என்னுடைய பதில்’ என்பது இதன் பொருள். அந்த தகவல் பி.ஓ.எஸ் மெஷினை
வந்தடையும் போது தான் தகவல கடைக்காரர் சிரித்துக் கொண்டே பொருட்களைத் தருவார்.
(
தொடரும் )
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக