Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 3 மே, 2019

மதச் செய்திகள்

Image result for scientology    


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

இந்தியா மதங்களின் தேசம். பல்வேறு மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையாய் கைகோத்து வாழ கற்றுக் கொடுக்கும் சமூகம் நமக்கு இருக்கிறது. ஆங்காங்கே விஷமிகள் தூவி விடும் விதைகள் கலவரங்களை உருவாக்கினாலும், அதை அடையாளம் கண்டு கொண்டு சட்டென அகற்றி விடும் மனித நேயம் மிக்க மக்கள் நம்மிடையே ஏராளம் உள்ளனர். அதனால் தான் நமது தேசம் உலக மக்கள் அனைவரும் வியக்க வைக்குமளவுக்கு இனிமையாய் இருக்கிறது.
நமக்குத் தெரியாத பல மதம் சார்ந்த விஷயங்கள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு பத்து செய்திகள் இங்கே.
  1. கடவுளின் கையெழுத்து.
மனித உடல் ஒரு ஆச்சரியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மனிதன் இறைவனின் படைப்பு என்பது தான் ஆத்திகர்களின் நம்பிக்கை. அதை நிரூபிக்கும் விதமாகத் தான் மனிதனுடைய உடல் இருக்கிறது. மனித உடலின் வியப்புகளை இன்னும் மனித விஞ்ஞானம் முழுமையாய் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் நிஜம். மனித மூளையைப் போன்ற ஒரு கணினியையோ, மனித கண்களைப் போன்ற ஒரு கேமராவையோ உருவாக்குதல் சாத்தியமில்லை என்கிறது விஞ்ஞானம்.
மனிதர்கள் 22,000 மரபணுக்களால் ஆனவர்கள். மனித மரபணுக்களில் வெறும் மூன்று சதவீதம் தான் இந்த எண்ணிக்கை. அப்படியானால் மிச்சம் 97% மரபணுக்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது. அதில் கடவுளின் கையெழுத்து இருக்கிறது ஒவ்வொரு மனிதனுக்கும் அது தனித்தனியாய் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, கஸகஸ்தானிலுள்ள இரண்டு விஞ்ஞானிகள் 2013ம் ஆண்டு இதைச் சொன்னார்கள். மரபணு ஆராய்ச்சியாளர் பிரான்சிஸ் கோலின்ஸ் “கடவுளின் மொழி” எனும் நூலில் இந்த மரபணுக்களில் இருப்பவை கடவுளின் எழுத்துகள் என்கிறார்.
  1. எபியோனைட்ஸ்
ஒரு குழுவினர் இயேசுவே கடவுள் என வழிபட்டார்கள், ஆனால் கிறிஸ்தவர்கள் அல்ல. குழப்பமாக இருக்கிறதா ? முதல் சில நூற்றாண்டுகளில் எபியோனைட்ஸ் என்றொரு மதக் குழு இருந்தது. இவர்களுடைய நம்பிக்கை இயேசு யூதமதத்தின் சட்டங்களைக் கடைபிடித்ததால் கடவுளானார் என்பது தான். கி.பி 70களில் இந்த மதம் ஆரம்பமானது என நம்பப்படுகிறது.
இவர்கள் யூதர்களின் கடவுள் இயேசு என்றும், அவர் இறந்து உயிர்த்தார் என்றும் பறைசாற்றினார்கள். ஆனால் கன்னியிடமிருந்து பிறந்தார், உலக மீட்பர் போன்ற கிறிஸ்தவ தத்துவ சிந்தனைகளை எதிர்த்தனர். காலப்போக்கில் கிறிஸ்தவ சிந்தனைகள் வலுப்பெற்று, நம்பிக்கைகள் பரவலான போது இந்த மதம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து காணமலேயே போய்விட்டது.
  1.  மணிசேயிஸம்
நான் தான் கடவுளிடமிருந்து அனுப்பப்பட்ட தூதன் என்று சொல்லிக் கொண்ட ஒரு நபர் உருவாக்கிய ஒரு மதம் சட்டென கிளை விட்டுப் பரந்தது. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஆரம்பமானது. மணி எழுதிய நற்செய்தி தான் இந்த மதத்தின் புனித நூல்.
“அறிவைத் தேடு, அதுவே ஆண்டவன் வீடு” என்பது தான் இந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தம். நல்ல அறிவைத் தேடி மூளையைச் செழுமையாக்குபவனுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது தான் இந்த மதத்தின் கோட்பாடு. சீனா, ரோம் என பல இடங்களில் பரவிய இந்த மதம் காலப்போக்கில் கொள்வாரில்லாமல் தேய்ந்து அழிந்தது. கிபி ஆயிரம் வரை இதன் பதிவுகள் காணப்படுகின்றன.
  1. சாத்தான் வணக்கம்
இதென்னடா புதிய கதை ? எல்லோரும் கடவுளைத் தானே வணங்குவார்கள். கடவுளுக்கு எதிராக இருக்கும் சாத்தானை வணங்குவார்களா ? என வியக்க வேண்டாம். உலகெங்கும் வேர்விட்டு முளைவிட்டுக் கிளைவிட்டு வளர்ந்து வருகின்ற ஒரு மதம் சாத்தான் வழிபாடு.
1948களிலேயே இதன் விதை தூவப்பட்டது, 1966ல் அதிகாரபூர்வமாக “சாத்தான் ஆலயம்” கட்டப்பட்டு வழிபாடும் துவங்கப்பட்டது. நல்ல மதங்கள் மண்ணில் நல்லவர்களாக வாழ்ந்து, சொர்க்கத்தை அடையச் சொல்கின்றன. சாத்தான் வணக்கமோ, சாத்தானை வணங்கு உலக செல்வங்கள் கிடைக்கும் என அழைப்பு விடுக்கின்றன.
குடும்பங்கள் சிதையவேண்டும், அடுத்தவன் கெட்டுப் போகவேண்டும், உலகம் உருப்படாமல் போகவேண்டும் போன்றவையெல்லாம் இவர்களுடைய பிரார்த்தனைகளில் சில.
  1. ஷங் சி லீ அசோஷியேஷன்
“நான் கடவுள்” என காலர் தூக்கித் திரியும் மதவாதிகள் அடிக்கடி முளைப்பதுண்டு. தங்களுடைய கூற்றை மெய்ப்பிக்க அவர்கள் ஏதேனும் வித்தைகள் செய்து மக்களை வசீகரிப்பதும் உண்டு. அந்த விதத்தில் ஷங் சி லி வித்தியாசமானவர்.
தன்னிடம் ஏராளம் சக்தி இருப்பதாக இவர் சொல்லிக் கொள்வார். தனது புகைப்படங்களை எடுத்து போட்டோ ஷாப் வேலைகள் செய்து தன்னைச் சுற்றி வானவில்லும், ஒளி வட்டமும் தெரிவதாக மாற்றி விடுவார். இதன் மூலம் ஏராளமான மக்களை ஏமாற்றினார் என்கிறது தைவான் அரசு.
வெறும் போட்டோக்களை வைத்து ஒரு மதத்தை உருவாக்கி அதன் மூலம் பல மில்லியன் டாலர்களை ஒருவர் சம்பாதித்தது வியப்பு தான் !
  1. மார்மன்கள்
வெளிப்பார்வைக்கு மார்மன்கள் கிறிஸ்தவ மதத்தின் கிளை மதம் போலத் தோன்றும். ஆனால் இரண்டும் சம்பந்தமில்லாத இரண்டு மதங்கள். ஜாண் ஸ்மித் என்பவரால் 1820 ல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மதம். ஜாண் ஸ்மித் இயேசுவையும், கடவுளையும் கண்டதாகவும் அதன் அடிப்படையில் புதிதாய் ஒரு மதத்தை ஆரம்பித்ததாகவும் பிரகடனம் செய்யத் தொடங்கினார்.
தங்கச் சுருள்களில் எழுதப்பட்டிருந்த கடவுளின் வார்த்தைகள் தான் மார்மன்களின் புனித நூல் என அவர் அறிவித்தார். இயேசுவை கண்டதாக ஒரு பதிவும், இயேசுவையும் தூதர்களையும் கண்டதாக ஒரு பதிவும், கடவுளை நெருப்பு தூணாக கண்டதாய் ஒரு பதிவும், கடவுளையும் இயேசுவையும் கண்டதாக ஒரு பதிவும் இவரது கதைகளில் உண்டு. கடைசிக் காட்சியே அவரது தற்போதைய வெர்ஷன் நூலில் உள்ளது.
கடவுள் கட்டளையிட்டார் என்று சொல்லி அவர் செய்த செயல்களில் 14 வயது சிறுமியர் உட்பட 40 பேரை திருமணம் செய்து கொண்டதும் அடக்கம்.
  1. ஏலியன் மதம்
டோரதி மார்ட்டின் எனும் ஒரு பெண் ஒரு மதத்தை ஆரம்பித்தார். அவருக்கு ஏலியன் கிரகத்தோடு தொடர்பு இருந்தது. ஏலியன் கிரகமான கிளாரியோன் எனும் கோளில் இருந்து அவருக்கு அடிக்கடி அமானுஷ்யவிதமாக செய்திகள் வந்து கொண்டிருந்ததாக அவருடைய‌ ஆதரவாளர்கள் நம்பினர்.
டிசம்பர் 21ம் தியதி 1954ல் உலகம் அழியும் என இவர்கள் பிரச்சாரம் செய்தனர். மக்கள் பலர் இவர்களை நம்ப இவர்களுக்கு வருமானமும் அதிகரித்தது, இவர்களுடைய மதம் பரவவும் தொடங்கியது. ஆனால் என்ன, அவர்கள் சொன்ன நாளில் உலகம் அழியவில்லை.
பிறகு வேறு செய்திகள் வந்ததாகவும், இந்த மதம் தான் உலகைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கொள்கை மாற்றினார்கள். 1992ல் டோரதி இறந்ததும் ஏலியன் செய்திகள் வருவதும் நின்று போனது, மதமும் அழிந்து போனது.
  1. மாமி வாட்டா
மாமி வாட்டா வை, கடல் கன்னியின் வடிவம் என்று சொல்லலாம். பாதி பெண், பாதி மீன் தான் இந்தக் கடவுள். நீந்திக் கொண்டிருக்கும் போதோ, கடலில் குளிக்கும் போதோ தண்ணீருக்குள் மூழ்கிப் போவது போல உணர்ந்தால் அது இந்த கடல் தெய்வத்தின் வேலையாம்.
அவளுடைய பக்தர்களை அப்படியே கடலுக்கடியில் இழுத்துக் கொண்டு போய் ஆனந்தமாய் வைத்திருக்குமாம். பிறகு அப்படியே பக்தர்களின் கனவுக்குள் நுழைந்து அவர்களை இனிமையான நினைவுகளுக்குள் கொண்டு செல்லுமாம். ஒரு படி மேலே போய் நினைத்த உருவம் எடுத்துக் கொண்டு வந்து பக்தர்களை சந்திக்கவும் செய்யுமாம்.
  1. ஆல்மெக் மதம்
உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மதங்கள் இருந்த சுவடு இல்லாமல் மறைந்து போயிருக்கின்றன. அப்படி ஆயிரம் ஆண்டுகள் வலிமையாய் இருந்த ஒரு மதம் தான் இந்த ஆல்மெக். இன்று அதன் சுவடுகள் இல்லை. கிமு 1400 முதல் கிமு 400 வரை இந்த மதம் இருந்தது.  அதன் பின்பு அந்த மதம் முழுமையாய் அழிந்தது.
இந்த மதம் நமக்கு அறிமுகமான மாயன்கள் மற்றும் ஆஸ்டெக் போன்ற மதங்களின் சாயலிலும், கோட்பாடுகளிலும் இருந்ததாக நம்பப்படுகிறது. 


10 சயின்டாலஜி
அறிவியலும், கடவுளும் எப்போதுமே முரண்பட்டவர்கள் எனும் சிந்தனை உண்டு. சயின்டாலஜி அறிவையும், அறிவையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட மதம். அறிவியல் புனை கதை எழுத்தாளர் ரான் ஹப்போர்ட் உருவாக்கிய இந்த மதம் இன்று பிரபலம்
சுய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், பயிற்சிகள் கல்வி அறிவியல் இவற்றை வளர்த்துக் கொண்டால் நீங்கள் ஆன்மீகவாதி என்பது தான் இதன் அடிப்படை போதனை.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக