இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு பழகிப்போன
நம்மில் பலருக்கு இயற்கை சூழலில் மூலிகை வாசம், பச்சை பசேலென இருபுறமும் இயற்கை
எழில் கொஞ்சும் அழகு, மலை பயணம், இரு மொழி பேசுவோரின் கலாசார சந்திப்பு, இதுவல்லவா
பயணம் என அசர வைப்பதுதான் செங்கோட்டை – தென்மலை பயணம். இங்கு சுற்றுலா செல்வதற்கு
பேருந்தை தேர்வு செய்வதை காட்டிலும் ரயிலில் செல்வதே சிறப்பு.
செங்கோட்டையிலிருந்து
தமிழக, எல்லை பகுதியான புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு மலைப்பகுதிக்கு செல்லும்
சாலை, ‘எஸ்’ வடிவில் ஏறிச்செல்கிறது. ‘எஸ் வளைவு’ என அழைக்கப்படும் இந்த இடத்தில்,
ரயில் வழித்தடம், சாலையை மேல்புறமாக, பாலத்தின் வழியே கடந்து செல்லும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் சென்றால் இந்த தடத்தில் 100 சிறிய பாலங்கள், 3 பெரிய
பாலங்கள், 5 குகைகள் போன்றவற்றை பார்க்க முடியும்.
செங்கோட்டையிலிருந்து எஸ்.வளைவை தாண்டியதும் முதல் குகையில் பயணிக்கலாம். நியூ ஆரியங்காவு பகுதியில் 2வது குகையும், எடமண் பகுதியில் 3வது குகையும், தொடர்ந்து அருகருகே 4வது மற்றும் 5வது குகையிலும் பயணிக்கலாம். இந்த பாதையில் ரயிலில் செல்லும் அனுபவம் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் வெகுவாக கவரும். இந்த வழியே செல்லும்போது ரயில் 20 முதல் 30 கி.மீ வேகத்திலேயே செல்லும். இந்தப்பாதையை சுற்றுலா பாதையாக அறிவிக்க ரயில்வே துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது
ஆரியங்காவை அடுத்த கழுதுருட்டியில் இருந்து சரியாக ஒரு கி.மீ., தூரத்தில், 13 கண் பாலம் அமைந்துள்ளது. புராதான சிறப்பு வாய்ந்த இந்த பாலத்தில் நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 150 மீட்டர் நீளமும், 60 அடி உயரமும் உள்ள இந்த பாலம், 13 ஆர்ச் முகப்புகளும், 12 பெரிய தூண்களுடனும், பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.
செங்கோட்டையிலிருந்து திங்கள்கிழமை தோறும் வேளாங்கண்ணி எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், நெல்லை பாலக்காடு ரயிலிலும் தினசரி ரயிலான செங்கோட்டை கொல்லம் ரயிலிலும் செல்லலாம்.
செங்கோட்டையிலுள்ள ரயில் நிலைய தொலைபேசி எண்கள்: 04633- 233188 – 235354. போலீஸ் நிலைய தொலைபேசி எண்: 04633- 233274. அரசு மருத்துவமனை தொலைபேசி எண்:04633- 233144. (சனிக்கிழமை தோறும்
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக