Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 மே, 2019

செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடித்தால் உடல் சீராகும்



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


றுப்புகளை வேலைசெய்ய வைக்கும்… ரத்தம் இயல்பாக சுத்திகரிக்கப்படும்…
கொளுத்தும் அக்னி வெயில் கோடைகாலம் தொடங்கி, அக்னி நட்சத்திரம் நடைபெறுவதை முன்னிட்டு, கடும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பொது மக்கள் குளிர்ந்த குடிநீர், பிரிட்ஜ், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட்டுகளில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். சிலர்ஆர்ஓ வாட்டர் என்று பலநாட்களாக இருப்பில் வைத்திருந்த தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதை பயன்படுத்தி் வருவதால் அவர்களுக்கு வயிற்று கோளாறுகள், தொண்டை கரகரப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சளிபிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. இதனைகருத்தி கொண்டு பெரும்பாலானோர் தற்போது செம்பு பாத்திரத்தில் குடிநீர் பிடித்து வைத்து உபயோகித்து வருகின்றனர்.செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம்உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலைசெய்ய வைக்கும்.

நல்லரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் , ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த உடல் நலப் பிரச்னைகளின் ஏற்படாது.உடலில் எலும்புகளை உறுதிசெய்யும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும். ரத்தசோகை பிரச்னையின் வரவைகட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறியதண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல்ஆரோக்கியம், உடல்வலிமையும், உணவுசமைத்தும் பயன்படுத்தி வந்தால், உயிரணுக்கள் உற்பத்தி அதிகமாகும். பழங்காலங்களில் பெண்களை திருமணம்செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீர்வரிசையில் கொடுத்து அனுப்புவார்கள். 

புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பழங்காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கிய மாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்து போய் விட்டதால், இப்போதுள்ள
  குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே  பல்வேறு உடல்பிரச்னைகளை அதிகஅளவில் ஏற்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்றசெம்பு பாத்திரங்கள் தற்போது சென்னை, மதுரை,   மற்றும்திருப்பூர் பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்டு டெல்டாமாவட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக  வந்த வண்ணமாக உள்ளனர்.

செம்பு தகட்டில் உருளி,தவளை, ஜக்,டம்ளர், தேக்கு, பாட்டில் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகிறது. கடந்தாண்டு கிலோ ரூ. 600க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.1500 விற்பனை செய்யப்படுகிறது.அனைத்து மக்களும் இயற்கைக்கு மாறி வருவதால், கடந்தாண்டை விடசெம்பு பாத்திரங்களின் விற்பனை அதிகரித்துள்ளது எனசெம்பு பாத்திர வியாபாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து செம்பு பாத்திரம் விற்பனையாளர் ஆனந்த்
  கூறுகையில், கோடைகாலத்தில் மக்கள் தரமற்ற பாத்திரங்களில் தண்ணீர்  குடித்து உடல்நலக்குறைவு ஏற்படுத்தி கொண்டனர். 

சிலஆண்டுகளுக்கு முன்பு, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் உடல்நலத்திற்கு நல்லது என மருத்துவர்கள் , முதியவர்கள் கூறியதையடுத்து, செம்பு பாத்திரத்தின் விற்பனை விறுவிறுப்பானது. ஆனால்மத்திய அரசு
  தற்போதுசெம்பு தகட்டிற்கு 12 சதவீதமும், செம்பு பாத்திரங்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்ததால் , பொது மக்களுக்கு ஒரு பாத்திரத்திற்கு ரூ.100 முதல் ரூ.250 வரை விலைஉயர்த்த வேண்டியுள்ளது. 

இதனால் பொது மக்கள் வாங்குவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டுகளில் சுமார் 200 கிலோ விற்பனை செய்து வந்தநிலையில், இந்தாண்டு
  தினந்தோறும் சுமார் 400 கிலோ செம்பு பாத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவேமத்திய மாநிலஅரசுகள் ஜிஎஸ்டி வரியை குறைத்தால், செம்பு பாத்திரங்களின்  விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றார்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக