Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 மே, 2019

கொழுந்து விட்டு எறியும் தீயைக் கண்டால் உடனுக்குடன் செய்யவேண்டியவைகள்

Image result for fire 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


கொழுந்து விட்டு எறியும் தீயைக் கண்டால் உடனுக்குடன் செய்யவேண்டியவைகள்:-
1. நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
2. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
3. எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீ விபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
4. ஒரு நபரை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அந்நபரை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.
5. ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
6. தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இச் செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
7. தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும். தீக்காயமானது நாணையத்தை விட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ அந்நபரை சுகாதார பணியாளரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
8. தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது. சிறிய தீ காயங்களாக இருந்தால், இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்தும் தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்து போனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
9. தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த ஒரு பொருளையும் நீக்கக் கூடாது. குளிர்ந்த நீரைத் தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக் கூடாது.
10. சிறிய தீக்காயங்களாக இருந்தால் பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
11. சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந்துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.
12. தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
13. கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியைக் குறைக்கும். (சிலர் வாழை இலை கொண்டு மூடச் சொல்வார்கள்)
14. தீக்காயம் பட்டவருக்கு (மருத்துவரின் அனுமதியுடன்) அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
தீபாவளி நேரத்தில் ஏற்படும் விபத்துக்களுக்கான முதல் உதவிகள் சில:-
முதலில் பட்டாசு காயங்களுக்கான முதல் உதவிகள் சில:-
1. காயம் ஏற்பட்ட உடல் பகுதியை உடனே தண்ணீரில் மூழ்கவிடுங்கள் அல்லது தண்ணீரில் நனைத்த துணியால் காயத்தை அழுத்தமாக மூடுங்கள். பட்டாசு காயம் பட்ட இடத்தில் மோதிரம், வளையல், கைக் கடிகாரம் போன்ற ஆபரணங்கள் இருந்தால் உடனே அகற்றிவிடுங்கள். காயம் வீங்கிய பிறகு அவற்றை அகற்றுவது சிரமம் தரும்.
2. காயம் பட்ட இடம் முகமென்றால் உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவுங்கள். கையென்றால் குழாய்த் தண்ணீரில் கையை நனையுங்கள். இவ்வாறு சுமார் 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் நனைத்த பின்னர், காயத்தின் மீது ’சில்வர் சல்ஃபாடயசின்’ மருந்தைத் தடவவும். பிறகு, மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
3. தீக்காயத்திற்கு கட்டு தேவை என்று எண்ணுபவர்கள் காயத்தில் ஒட்டிக்கொள்ளாத ‘ஃபுராமைசிடின் டூல்’ எனும் மருந்துத் துணியால் கட்டுப்போட வேண்டும். அப்போது தான் கட்டைப் பிரிக்கும்போது வலி உண்டாகாது.
ஏன் தீ காயத்திற்குத் தண்ணீர் தேவை? : -
பட்டாசு காயங்கள் முகம், உள்ளங்கை மற்றும் கைவிரல்களில் தான் உண்டாகும். ஆனால், கையைத் தண்ணீரில் நனைப்பதற்குப் பல பேர் பயப்படுவார்கள். தண்ணீரில் நனைத்தால் கொப்புளம் ஏற்பட்டு விடும் என்று ஒரு தவறான எண்ணம் பலரிடம் உள்ளது தான் இதற்குக் காரணம். இது உண்மையில்லை. தீக்காயத்தைத் தண்ணீரில் எவ்வளவு விரைவில் நனைக்கிறோமோ, அந்த அளவுக்குக் காயம் ஏற்பட்ட இடத்தில் வெப்பம் குறைந்து, காயத்தின் தன்மை குறையும். அதில் கொப்புளம் ஏற்படுவதும் தடுக்கப்படும். எனவே, தீக்காயத்தைத் தண்ணீரில் நனைக்க யோசிக்க வேண்டியதில்லை. மேலும், பட்டாசு காயத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், இவ்வகைக் காயத்தில் வெப்பத்தைக் குறைப்பதே முதலுதவியின் முக்கிய நோக்கமாகும்.
தீ காயம் ஏற்பட்டால் செய்யக் கூடாதவைகள் : தீக்காயத்தின்மீது அரிசிமாவு, பேனா மை, சீனிப்பாகு, பச்சிலை மருந்து முதலியவற்றைப் பூசுவது நல்லதல்ல. தீக்காயத்துக்குத் துணிக்கட்டுப் போட வேண்டிய அவசியமும் இல்லை.
தீபாவளி அன்று விபத்துக்களை தவிர்க்க சில எளிய வழிகள்:-
1. பட்டாசுகளை வாங்கும்போது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டுமே வாங்குங்கள். தனித்தனியாகப் பிரித்து குவித்து வைத்துள்ளவற்றை வாங்க வேண்டாம். அவை பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம்.
2. கம்பி மத்தாப்பு தவிர வேறு எந்தப் பட்டாசையும் கைகளில் வைத்துக் கொண்டு வெடிக்காதீர்கள். தரையில் வைத்துத் திரியைப் பற்ற வையுங்கள். முகத்தை வெடிக்கு நேராக வைத்துக் கொண்டு கொளுத்தாதீர்கள். பக்கவாட்டில் நின்று கொண்டு திரியைக் கொளுத்துங்கள். தீப்பொறி பட்டாசில் பற்றிக் கொண்டதும் பின்நோக்கி நகர்ந்து கொள்ளுங்கள்.
3. சட்டைப்பையில் வெடிகளை வைத்துக்கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள்.
4. குழந்தைகளைத் தனியாகப் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோர் மேற்பார்வையில் மட்டுமே அவர்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்க வேண்டும்.
5. டெர்லின், நைலான், பாலிஸ்டர், பட்டு போன்ற ஆடைகள் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்காதீர்கள் மாறாக பருத்தி ஆடைகளைத் தளர்வாக அணிந்து கொண்டு பட்டாசு வெடியுங்கள்.
6. வீட்டுக்குள் மற்றும் தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வீட்டு மாடி, பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களில் பட்டாசு வெடிப்பது நல்லது.
7. பட்டாசுத் திரியில் தீப்பற்றியதும் அது வெடிக்கவில்லை என்றால் அதன் அருகில் சென்று ‘என்ன ஆயிற்று?’ என்று பார்க்காதீர்கள். அருகில் சென்றதும், திடீரென்று அது வெடித்துவிடலாம். மாறாக, அந்தப் பட்டாசின் மீது தண்ணீரை ஊற்றிவிடுங்கள்.
8. பட்டாசுகளை வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக் கொள்வது எப்போதுமே நல்லது.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக