வெள்ளி, 31 மே, 2019

விஷக் கடி முதலுதவிகள்

Image result for விஷக் கடி முதலுதவிகள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள அநேக விலங்குகள் குடியிருப்புகளை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றன. இது அனைவரும் அறிந்ததே! மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் அழையா விருந்தாளிகளாக பாம்புகளும் சில நகரங்களில் குடிபெயர்ந்து வருகிறது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்குக் காரணம் அதன் விஷக் கடி தான்.
பாம்புக் கடியை முதலில் எப்படி அடையாளம் காண்பது. வாருங்கள் பார்ப்போம்.
கடிக்கப்பட்ட அவ்விடம் இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா....??? கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி) காணப்படுகிறதா.? கடுமையான வலி இருக்கிறதா..???
அப்படி எனில் இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத் தான் இருக்கும். இந்நிலையில் செய்ய வேண்டிய முதலுதவிகள் பின்வருமாறு:-
முதலில், இறுக்கி கட்டுப் போட வேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்த பகுதி அழுகிப் போகலாம். அதனால் எப்போதுமே லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
பின்னர், காயம் பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும். அதிலும், குறிப்பாக பாம்பு கடிபட்டவர் பதற்றம் அடையக் கூடாது. அவர் பதற்றமடையும் போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் அந்நபருக்கு ஆறுதல் கூறி தைரியத்தை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்கக் கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவு படுத்துகிறது. இதனையும் நாம் கவனத்தில் வைத்தல் அவசியம். மேலும், பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
தேள், பூரான் போன்ற விஷக்கடி ஏற்பட்டவர்களுக்கு முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது தான் சிறந்த முதல் உதவி.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்