Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 மே, 2019

ஞானப்பல் நல்லதா?

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு பற்கள் முளைக்கத் தொடங்கும். முதலில் தோன்றுபவை பால் பற்கள்; அவை விழுந்த பிறகே நிரந்தரமான பற்கள் முளைக்கும். 13 வயதுக்குள் மொத்தம் 28 பற்கள் முளைத்துவிடும். மீதமுள்ள நான்கு பற்கள் 17 வயதுக்கு மேல் முளைக்கும். அவைதான், `ஞானப்பற்கள்’ (Wisdom Teeth) என அழைக்கப்படுகின்றன. குழந்தைப் பருவத்திலிருந்து, சற்று வளர்ந்து பக்குவமான நிலையிலும், அறிவுத்திறனுடன் இருக்கும் நிலையிலும் இவை முளைப்பதால், ‘ஞானப்பல்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
எது ஞானப்பல்?
வாயிலிருக்கும் மொத்தப் பற்களின் எண்ணிக்கை 32. பற்களின் மேல் வரிசையிலும், கீழ் வரிசையிலும் இடதுபுறம் மூன்று, வலதுபுறம் மூன்று என மொத்தம் 12 கடைவாய்ப்பற்கள் இருக்கும். கடைவாய்ப்பற்களின் வரிசையில் கடைசியிலிருக்கும் பல்லே ஞானப்பல். பற்களின் மேல் வரிசையில் இரண்டு, கீழ் வரிசையில் இரண்டு என மொத்தம் நான்கு ஞானப்பற்கள் இருக்கும்.
எப்போது முளைக்கும்?
17 வயதிலிருந்து 23 வயதுக்குள் முளைக்கும். தாடை மிகவும் சிறியதாக இருப்பவர்களுக்கு முதல் இரண்டு கடைவாய்ப்பற்கள் இயல்பாக முளைத்துவிடும். மூன்றாவது கடை வாய்ப்பல்லான ஞானப்பல் முளைக்க இடம் இருக்காது. அதனால்,  அது எலும்புக்குள்ளேயே இருந்துவிடும். எலும்புக்குள் பல் இருக்கும் நிலை ‘இம்பாக்‌ஷன்’ (Impaction) என்று கூறப்படுகிறது. சிலருக்கு முதல் கடைவாய்ப்பல் சரியாக முளைத்துவிடும். இரண்டாவது கடைவாய்ப்பல்லை இடித்துக்கொண்டு ஞானப்பல் முளைக்கும்.

என்னென்ன பாதிப்புகள்?
ஞானப்பல் முளைக்கும்போது எல்லோருக்கும் பிரச்னை ஏற்படாது. ஆனால், பிரச்னை ஏற்பட்டால், அவசியம் பல்லை அகற்ற வேண்டும். சிலருக்கு வீக்கம், வாய் திறக்க முடியாத அளவுக்கு வலி, கெட்ட நாற்றம், சரியாக முளைக்காமல் மேல் தாடையை இடித்துக் கொண்டு இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். வலி, வீக்கம் இருக்கும் நிலையில் பல்லை எடுப்பது மிகவும் சிரமம். நோயாளிகள் நன்றாக ஒத்துழைப்பு அளித்தால்தான், எளிதாகப் பல்லை அகற்ற முடியும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்துகள், வாயைத் திறப்பதற்கு பயிற்சிகள் கொடுத்து பல்லை அகற்றுவார்கள். 

ஞானப்பல் முழுவதுமாக எலும்பின் உள்ளே இருந்தால், முன்னாலிருக்கும் பல்லின் வேரை இடித்துக்கொண்டு இருக்கும். அரைகுறையாக முளைத்திருந்தால், முன்னாலிருக்கும் பல்லின் மீது சாய்ந்ததுபோல இருக்கும். அந்த நிலையில் முன்னாலிருக்கும் இரண்டாவது கடைவாய்ப்பல்லைக் காப்பாற்றுவதற்காக ஞானப்பல்லை அகற்ற வேண்டும். சிலருக்கு, பல் முளைக்கவேண்டிய இடத்தில் ஈறு வீங்கியிருக்கும். அந்தப் பகுதியில் பல் வெளியே வர இடம் இருக்கிறதென்றால், பல்லுக்கு மேலிருக்கும் ஈறுப் பகுதியை கீறிவிட்டால், பல் தானாக முளைத்துவிடும். பல் முளைக்காமல் எலும்புக்குள்ளேயே இருக்கும்போது மிகவும் அரிதாக சிலருக்கு கட்டியாகவோ, புற்றுநோய்க் கட்டியாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. பல் முளைக்காமல் எலும்புக்குள்ளேயே இருந்துகொண்டு பிரச்னை கொடுத்தால், அறுவை சிகிச்சை மூலம் பல் இருக்கும் எலும்பை ட்ரிம் செய்து ஞானப்பல்லை அகற்றுவார்கள். 

எப்படிப் பராமரிப்பது?
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பற்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். முதன்முறையாகப் பல் பரிசோதனைக்குச் சென்றால், ஞானப்பல் எப்படியிருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்க வேண்டும்.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக