இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பூனையின்
கண் பார்வை மனிதனை விட 8 மடங்கு கூர்மையானது. பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு
ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. பூனைகள் பண்டைய
எகிப்தில் வழிபாட்டு விலங்குகளாக இருந்து வந்ததால், அவைகளை பொதுவாக எகிப்தியர்கள்
வீட்டில் வளர்த்து வணங்கினர்.
பூனைகள் இறந்தால் அதற்கும் பிரமிடுகள் கட்டி, சில
எலிகளையும் பாடம் செய்து எகிப்தியர்கள் புதைத்துள்ளனர். அரசர்களுடன் அவர்களது
பூனைகளுக்கும் பிரமிடுகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூனைகள்
பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன.
சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக்
காணப்படும்.
பூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33).
நுண்ணிய கேள்விப் புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள்
காணப்படுகிறது.
பூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ் நாளாந்தம்.
12-16 மணி நேரம் உறங்கும் தன்மை கொண்டது பூனை.
சாதாரணமாக உடல் வெப்பநிலை, 38 - 39
°C (101 - 102.2 °F) வரை காணப்படும்.
பூனைகள்
விரைவான இனப்பெருக்க விகிதம் கொண்டவை. மிதக்கும் விலா எலும்புகளால் பூனையின்
முன்னங்கால்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தம் தலை நுழையும் எந்த சிறிய இடத்திலும்
பூனைகளின் உடல் நுழையும்.
முன்னங்கால்களிலில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில்
இருந்து நான்கு நகங்களும் பூனைகள் கொண்டு இருக்கும். பூனைகள் நடக்கும் போது ஓசை
கடத்தாமலிருக்கும் வகையில் மெத்தை போன்ற பாத அமைப்பை பெற்றுள்ளது.
நுகரும் புலன்,
மனிதனை விட 14 மடங்கு அதிகம். பூனைகளின் நாக்கில் இனிப்புச் சுவையை அறியும்
நுகர்மொட்டுகள் இல்லாததால், பூனைகளால் இனிப்புச் சுவையை அறிய இயலாது.
மரபணு
மற்றத்தினால் இத்திறனை பூனைகள் இழந்துவிட்டன. மற்ற சுவைகளை பூனைகள் அறியும்.
பூனைகள் இரு மாதங்கள் வரை தமது குட்டிகளை சுமக்கும். ஒரு பூனை தமது வாழ்நாளில் 150
குட்டிகள் வரை ஈனும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக