இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள
மாமல்லபுரம் (மகாபலிபுரம்) ஒரு முக்கிய சுற்றுலா தலம் ஆகும். வரலாற்றுச்
சிறப்புள்ள சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை
சிற்பக்கலைகளின் திருப்புமுனையாக அமைந்த பல்லவர் காலச் சிற்பங்களின் கருவூலமாகத்
திகழ்கிறது.
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ.
தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில்
இருந்து 250 கி.மீ, செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரம்
அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன் முதலில்
அமைக்கப்பட்ட கட்டுமானக் கோவில் மகாபலிபுரம் கடற்கரைக் கோவில் ஆகும். இது
பல்லவர்களால் கட்டப்பட்டது.
சிறப்புகள் :
இந்த இடத்தை ஐ.நா சபையின்
உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இடம் தமிழகத்தின் மிக பிரபலமான
சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இந்த இடத்தின் மூலம் தமிழகத்தின்
வரலாற்றையும், சிற்பக்கலையையும், பாரம்பரியத்தையும் தெரிந்து கொள்வதற்காக பல
வெளிநாட்டுப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
ரத வடிவில் உள்ள கோவில்கள், ஒரே கல்லில்
செதுக்கப்பட்ட சிற்பங்கள் என மகாபலிபுரம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும்.
உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான
மகாபலிபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.
எப்படி செல்வது?
சென்னைக்கு மிக அருகாமையிலும்
பாண்டிச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக
சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு பயணிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம்
ஆகிய நகரங்களிலிருந்தும் மகாபலிபுரத்துக்கு பேருந்து வசதிகளும் இருக்கின்றன.
விமான வசதி :
சென்னை, திருச்சியில் சர்வதேச விமான
நிலையங்கள் உள்ளன.
ரயில் வசதி :
செங்கல்பட்டு (22 கி.மீ) அருகில் உள்ள
ரயில் நிலையம் ஆகும். இருப்பினும், சென்னை ரயில் நிலையம் (60 கி.மீ) அருகில் உள்ள
பெரிய ரயில் நிலையமாகும்.
மகாபலிபுரத்தை அடைவதற்கு டாக்ஸி அல்லது
வாடகை வண்டிகள் மற்றும் பேருந்துகள் இந்த நிலையங்களிலிருந்து கிடைக்கின்றன.
செல்ல வேண்டிய நேரம் :
வெப்பமண்டலத்தில் இருப்பதால் கோடை
விடுமுறையில் சென்று வர இது சிறந்த இடமல்ல. காரணம் மிக அதிகமான வெப்பம் நிலவும்
காலமாகும்.
நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறிது
வெப்பம் தணிந்து காணப்படும். அந்நேரத்தில் சுற்றிப்பார்க்க எதுவாக இருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள் :
மகாபலிபுரத்தின் கடற்கரை கோவில், குகைக்
கோவில்கள், அர்சுணன் தபசு செய்யும் சிற்பம், ஐந்து ரதம், புலிக்குகை மற்றும் ஏராளமான
சிற்பங்கள் இருக்கின்றன.
இதர சுற்றுலா தலங்கள் :
மகாபலிபுரத்திலிருந்து 30 கி.மீ
தூரத்தில் சோழமண்டல கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள்,
கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டியே மகாபலிபுரம் கலை
நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும்.
நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு
துர்க்கையம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம்.
புலிக்குகை, அருங்காட்சியகம் மற்றும்
முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சுற்றுலா தலங்களாக அமைந்துள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத
கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என
வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக