வியாழன், 16 மே, 2019

பிள்ளைப்பூச்சியை கொன்றால் என்னாகும்?! - கிராமத்து வாழ்க்கை

  • இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்

    கைகளில் சுண்டு விரலுக்கு கீழ் இருக்கும் கோடுகளை எண்ணி எத்தனை குழந்தை பிறக்கும்ன்னு கணக்கு பண்ணி சந்தோசப்பட்டுப்போம்...
ஹமாம் அல்லது மெடிமிக்ஸ் சோப்பு, சிகப்பு கலர் சாந்துப்பொட்டு, கருப்பு மை, பவுடர் இதான் அன்றைய பெண்களின் காஸ்மெட்டிக் பொருட்கள்.  கொஞ்சம் வசதியான வீட்டு பொண்ணுன்னா ஸ்னோ பூசிப்பாங்க. வெள்ளை, கறுப்பு, பச்சை, நீலம், மஞ்சள்ன்னு கலர் கலர் சாந்து மார்க்கெட்டில் வர ஆரம்பிச்சது. விசேச நாட்களில் பெரிய சைஸ் சிவப்பு பொட்டுக்கு கீழ் ட்ரெஸ்க்கு மேட்சா வெள்ளை, பச்சை, மஞ்சளில் மூணு புள்ளிகள் வச்சுப்போம். சின்ன குழந்தைகளுக்கு புருவத்தின்மீது வெள்ளை, சிவப்பு நிறப் புள்ளிகள் வைப்பது வழக்கம்...
 
பிள்ளைப்பூச்சியை கொன்னுட்டா குழந்தை பிறக்காதுன்னு பெரியவங்க பயமுறுத்துவாங்க.
உருளைக்கிழங்கிற்கும், சப்போட்டாவுக்கும் வித்தியாசம் தெரியாம,  காய் கனியும்ன்னு காத்திருந்து பல்ப் வாங்குனதுலாம் சொன்னா என் பிள்ளைக மதிக்காது.
பல் விழுந்துட்டா அதை சாணிக்குள் வச்சு மண்ணில் புதைச்சு, அதை யானை மிதிச்சா அந்த பல் தங்கப்பல்லா மாறிடும்ன்னு சொன்னதை நம்பி அப்படி புதைச்சு வச்சிருக்கோம். 
தோள் மேல் கைப்போட்டால் வளரவே மாட்டோம். கடைசி வரைக்கும் குள்ளமாவே இருப்போம்ன்னு பயந்து பிரண்டு கைப்போடும்போதெல்லாம் தள்ளித்தள்ளி போவோம். 
Image result for இரட்டை வாழைப்பழம்,
ரெட்டை வாழைப்பழம் ஜோடியா இருக்கவுங்கதான் சாப்பிடனும்ன்னு சொல்வாங்க. இப்படி ரெட்டை வாழைப்பழத்தை தம்பதியர் சாப்பிட்டா ஒத்துமையா இருப்பாங்கன்னு  சொல்வாங்க. சின்ன பிள்ளைங்க சாப்பிட்டா ரெட்டை குழந்தை பிறக்கும்ன்னு சொல்வாங்க.
எறும்பு விழுந்த காபி, சாப்பாட்டை சாப்பிட்டா கண்பார்வை தெளிவா இருக்கும்ன்னு சொன்னதை நம்பி, எறும்பை எடுத்து போட்டுட்டு காஃபிலாம் குடிச்சிருக்கேன். ஆனாலும் கண்ணாடி போட்டாச்சுது..
Image result for கருடன் பறக்கும்
கருடன் வானத்துல பறக்குறதை பார்த்ததும் விரலை மேல உயர்த்தி கருடா கருடா பூ போடு ன்னு சொன்னால் கருடன் வெள்ளையாக விரல் நகத்தில் புள்ளி(பூ) போடும். நகத்தில்  எத்தனை புள்ளி இருக்கோ, அத்தனை ட்ரெஸ் கிடைக்கும்ன்னு நம்பினோம்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்