இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர்
100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடியுள்ளார்.
தமிழ் படமொன்றில் நடிகர்
வடிவேலுவிடம், வாங்க. செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது
போன்று காட்சிகள் இருக்கும். ஆனால் ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100
பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் ஆண் நர்சாக
பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42). கடந்த 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில்
அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை
கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இவர், நோயாளிகளை மரணத்தின்
விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார். எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை
கொண்டு ஊசி போட்டு விடுவார். இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார்.
இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார்.
பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ்
ஈடுபடுவார்.
சீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக
சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக
இருந்துள்ளார்.
இவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு
இவர் கடவுளாக இருந்துள்ளார். ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை
நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது.
இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.
இதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை
97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு
தெரிவித்துள்ளது.
மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை. இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ்
ஒப்பு கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர்
கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும்
உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில்,
நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது. வழக்கல்போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை.
அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி
ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விசாரணை முடிவில், நீங்கள்
மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய
விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன்
கூறியுள்ளார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக