Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 7 ஜூன், 2019

உடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்!


கோடையில் பலரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனப்படும் உடல் வறட்சி. இதற்குக் காரணமும் இருக்கிறது. பொதுவாகவே நம்மில் பலரும் இதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கோடையில் நம் உடலுக்கு நீர் அதிகம் தேவைப்படும். வெப்பம் அதிகமாக இருப்பதால், வியர்வையும் அதிகமாக வெளியேறும். ஆனால், நாம் எப்போதும், வழக்கமாக நீர் அருந்துவதுபோல அருந்திக்கொண்டிருப்போம். இதனால் `டீஹைட்ரேஷன்’ ஏற்படும். இந்தப் பிரச்னை ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது எப்படி… எதிர்கொள்வது எப்படி?.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com
 கோடை
“கோடைக்காலத்தில் `டீஹைட்ரேஷன்’ பிரச்னை ஏற்படக்கூடியதுதான். என்றாலும், குழந்தைகள் மற்றும் முதியோரைத்தான் இது அதிகம் பாதிக்கும். எனவே, இவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோடையில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெள்ளை, மங்கலான நிறம் கொண்ட உடைகளை உடுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்குக் கோடையில் அணிவதற்கென பிரத்யேகமான உடைகள் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக் கொடுத்து அணியச் சொல்லலாம். நாம் இருப்பது வெப்ப மண்டலப் பிரதேசம் என்பதால், அதைக் கருத்தில்கொண்டு நம் முன்னோர் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்தார்கள்; இப்போது நம்மில் பலரும் அணிந்து வருகிறோம். வெள்ளை, தூய்மையின் அடையாளம். அதோடு, வெள்ளை நிறப் பருத்தி உடை கோடைக்காலத்துக்கும் ஏற்றது. 
கோடையில் சூரிய ஒளி நம் உடலில் அதிகம் படுவதால், சோடியம், பொட்டாசியம் போன்றவை அடங்கிய எலெக்ட்ரோலைட்டுகள் நமக்குத் தேவைப்படும். எலெக்ட்ரோலைட்டுகள் அதிகம் கொண்டது இளநீர். இதை அருந்துவதன் மூலம் அதை ஈடுகட்டலாம். வெயிலில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீரைக் குடிக்கக் கொடுப்பது நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இளநீர்தான் மிகவும் சுத்தமானது. இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தாமல், 10 மணிக்குமேல் அருந்துவது சிறந்தது. இது, டீடீஹைட்ரேஷன்ஹைட்ரேஷனிலிருந்து நம் உடலைக் காக்க உதவும்.

கோடையில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை மிக எளிதாக நோய்தொற்றுகள் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, குழந்தைகளும் வயதானவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோடையில் அம்மை, வியர்க்குரு, மெட்ராஸ்-ஐ எனப்படும் கண் நோய் போன்றவற்றோடு பேன் தொல்லையும் ஏற்படலாம். உடல் சூடு அதிகரித்தால், பேன்கள் பல்கிப் பெருகும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 
 இளநீர்
கோடையில் பலர் ஷாப்பிங், மால் என்று ஜாலியாகப் பொழுதுபோக்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அங்கே விற்கப்படும் பேக்கரிப் பண்டங்கள், ஜங்க் ஃபுட் ஆகியவை குழந்தைகளைச் சுண்டி இழுக்கும். அவற்றை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக தர்பூசணிப் பழம் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவிகித நீர்ச்சத்து இருப்பதால், அது `டீஹைட்ரேஷன்’ ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி, திராட்சை போன்றவற்றின் விதைகளிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை ஊறவைத்துச் சாப்பிடலாம். இந்த விதைகள், சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கக்கூடியவை. எனவே, தர்பூசணி சாப்பிடும்போது அதன் விதைகளையும் சேர்த்துச் சாப்பிடுங்கள். அதிலுள்ள சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். அதோடு சுகாதாரமான சூழலில் விற்கப்படும் பழங்களை வாங்கிச் சாப்பிடுது ஆரோக்கியத்துக்கு நல்லது. 
தக்காளிச் சூட்டைத் தணிக்கக்கூடியது. எனவே, கோடையில் தக்காளி ஜூஸ் அருந்தலாம். இது நேச்சுரல் சன்ஸ்கிரீன் ஆகச் செயல்பட்டு சருமத்தையும் பாதுகாக்கும். வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் அருந்துவதும் நல்லது. இது, சிறுநீரகத்தைச் சுத்திகரிக்கும்; உடலுக்குப் புத்துணர்ச்சி தரும். சர்பத், நன்னாரி சர்பத், நுங்கு, பழக்கலவைகள் போன்றவை உடல்சூட்டைத் தணிப்பவை. இவை எலெக்ட்ரோலைட்டுகளைச் சமமாக வைத்துக்கொள்ள உதவும்.

 பிஞ்சு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. அதில்  90 சதவிகித நீர்ச்சத்து உள்ளது. பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை ப் பழச்சாறுகள் அருந்துவதும் சிறப்பு. சீரகம், வெந்தயம் போன்றவை உடல்சூடு தணிக்கும். மோர் சூட்டை தணிக்கும்; தயிராகச் சாப்பிடாமல் அதைக் கடைந்து வெண்ணெயை எடுத்துவிட்டு மோராக்கிச் சாப்பிடலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்’ ஆன்டி இன்ஃபெக்‌ஷனாகச் செயல்படக்கூடியது. புதினா, மல்லித்தழை ஜூஸ் போன்றவையும் `டீஹைட்ரேஷன்’ ஏற்படாமல் பாதுகாக்கும். இவை கோடையில் ஏற்படும் செரிமானக் கோளாறையும் சரிசெய்யும்”
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக