இது புதுசு... ஜலகம்பாறை... பேரக்கேட்டாலே சும்மா அதிருதில்ல... போலாமா?
எழில்மிகு..
இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
வேலூரில் இருந்து 99கி.மீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 12கி.மீ தொலைவிலும், ஏலகிரியில் இருந்து ஏறத்தாழ 40கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள எழில்மிகு நீர்வீழ்ச்சிதான் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி.
ஏலகிரி வழியாக பாயும் அத்தாறு ஆறு இங்கு நீர்வீழ்ச்சியாக பாய்கிறது. மலையின் பின்புறம் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
நிலவூரில் இருந்து மலை வழியாக பயணம் செய்தால் ஜலகம்பாறையை அடையலாம். அழகான வயல்களுடன் காட்சித்தரும் மலையில் இவ்வருவி அமைந்து சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்கிறது.
பறவை, விலங்குகளின் சத்தம்... அருவி தண்ணீரின் சலசலப்புச் சத்தம்... அருமையான அருவி நீர்... அழகான மரம், செடிகள்.... இவற்றை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த இடமென்றால் அது ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்.
அருவியின் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவ காலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.
மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வருடத்தின் எல்லா நாட்களிலும் இங்கு சீரான சீதோஷ்ணநிலை நிலவுவதால் இது ஒரு கோடை வாசத் தலம் என்பதையும் தாண்டி அனைத்து நாட்களிலும் செல்லக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
எப்படி செல்வது?
வேலூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
வாடகை வாகனங்கள் அல்லது சொந்த வாகனங்களில் சென்றால் இயற்கையை ரசித்துக் கொண்டே செல்ல முடியும்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
வேலூர் மற்றும் ஏலகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
ஏலகிரி மலை.
பூங்கானூர் ஏரி.
வேலவன் கோவில்.
தொலைநோக்கி இல்லம்.
அமிர்தி விலங்கியல் பூங்கா.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக