Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 ஜூன், 2019

வேதகால தியானங்கள்

Image result for வேதகால தியானங்கள்  

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



தியானம் எனில் கடவுளை மனதில் வழிபடுவது. கடவுள் எங்கும் நிறைந்தவர். சாதாரணமானதில் உயர்ந்ததை (இறைவனை) ஏற்றி வழிபடுவதே தியானம். இத்தகைய இறை தியானங்களை சாந்தோக்கிய உபநிடதத்திலும், பிரகதாரண்யக உபநிடத்திலும் மற்றும் பல உபநிடதங்களில் வித்யை என்றும் உபாசனை என்றும் பல்வகையாக விளக்கப்பட்டுள்ளது.
தியானத்தின் அங்கங்கள் : தியானத்தில் மூன்று அங்கங்கள் உள்ளன. தியானிப்பவன், தியானிக்கப்படுகின்ற தெய்வம் மற்றும் ஆலம்பனம் அல்லது தெய்வத்தை மனதில் ஏற்றி அல்லது தன்னையே தெய்வமாகத் தியானிப்பதற்கான ஆதாரம். வேதகாலத்தில் சூரியன், அக்னி, வாயு, நீர், ஆகாயம், பூமி, இயற்கை எனும் பிரகிருதி,இரண்யகர்பன், போன்ற இயற்கைப் பொருட்களை தியானத்தின் ஆலம்பனமாக கொண்டிருந்தனர்.
வேதகால தியான வகைகள் : வேதகால தியானம் உலகியல் நன்மைக்காகவும், ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் செய்யப்பட்டது.
1 சகாம, நிஷ்காம தியானங்கள்
பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு செய்யப்படும் தியானம் சகாம தியானம்.
இறையனுபூதிக்காக மட்டும் செய்யப்படும் தியானம் நிஷ்காம தியானம்.
2 கர்மாங்க, சுதந்திர தியானங்கள்
புறவழிபாடுகளின் அங்கமாகச் செய்யப்படுகின்ற தியானம் கர்மாங்க தியானம். இந்த தியானம், எந்த யாகம் அல்லது கர்மத்தின் அங்கமாக செய்யப்படுகிறதோ அந்தக் கர்மத்தின் (செயலின்) பலனை அதிகரிக்கச் செய்யும். எடுத்துக்காட்டாக, விஷ்ணு சஹஸ்ரநாமத்தை மட்டும் பாராயணம் செய்வதுடன் மஹாவிஷ்ணு தியானத்தையும் சேர்த்து செய்தால் அதன் பலன் பல மடங்காகிறது. இங்கே மஹாவிஷ்ணு தியானம் ’கர்மாங்க தியானம்’ ஆகிறது.
சுதந்திர தியானம் என்பது எந்த கர்மத்தின் அங்கமாகவும் அல்லாமல் தனியாக செய்யப்படுவது. எந்த தெய்வத்தைத் தியானிக்கிறமோ, எந்த ஆலம்பனத்தைப் பயன்படுத்துகிறோமோ அதற்கேப சுதந்திர தியானத்தின் பலனும் மாறுபடுகிறது.
3 சம்பத், பிரதீக உபாசனைகள்
உபாசனையில் பயன்படுத்தப்படுகின்ற ஆலம்பனத்தின் தன்மைக்கும் பாவனைக்கும் ஏற்ப உபாசனை, ’சம்பத் உபாசனை’ என்றும் ’பிரதீக உபாசனை’ என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
புஜாரி மூலம் இறைவனை அர்சித்து வழிபடுவது சம்பத் உபாசனை.
சாளக்கிராமம், சிவலிங்கம், கும்பம், மஞ்சள் உருண்டை முதலியவற்றில் இஷ்ட தெய்வத்தை ஏற்றி வழிபடுவது பிரதீக உபாசனை அல்லது தியானம்.
4 அதிதைவத, அத்யாம தியானங்கள்
புறத்திலுள்ள ஒரு பொருளை (எ. கா., சூரியன்) அல்லது இஷ்ட தேவதையை இறைவனாக வழிபடுவது அதிதைவத தியானம்.
மனித உடலில் உள்ள ஒரு அங்கத்தைத் (எடுத்துக்காட்டு; கண், இதயம், பிராணன்) தெய்வமாக வழிபடுவது அத்யாத்ம தியானம் ஆகும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக