இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
கிராமத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும் இந்த விளையாட்டுக்களை பற்றி நவீன கால குழந்தைகளிடம் கேட்டால், இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்று கேட்பார்கள்.
இதற்கு காரணம் நவீனமயமாகிவரும் நம் வாழ்க்கை முறைதான். குழந்தைகளை வெளியே விளையாட விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கும் பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட விளையாட்டுக்களை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
மூன்று பேருக்கு மேல் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டை விளையாடும் முன்பாக, இருவரை முதலில் தேர்வு செய்துகொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட இருவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு, கைகளை முக்கோணம் போல் உயர்த்தியப்படி நிற்பார்கள்.
விளையாடும் மற்ற எல்லாக் குழந்தைகளும் ஒருவர் பின் ஒருவராக முன்னிருப்பவரின் சட்டையைப் பிடித்தப்படி, ஒரே சங்கிலி போல் வரிசையாக நின்றுகொள்ள வேண்டும். கைகளை உயர்த்தி நிற்பவர்களின்; கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்ற வேண்டும்.
அப்போது சுற்றி விளையாடும் குழந்தைகள்...
'ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூத்துச்சாம்...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி, ரெண்டு பூ பூத்துச்சாம்...
மூணு குடம் தண்ணி ஊத்தி, மூணு பூ பூத்துச்சாம்...
நாலு குடம் தண்ணி ஊத்தி, நாலு பூ பூத்துச்சாம்..."
என பாடிக்கொண்டே, கைகளை உயர்த்தி நிற்கும் இருவருக்கும் இடையில் புகுந்து வருவார்கள். பாட்டு தொடரத் தொடர, சுற்றிச் சுற்றி வந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
'பத்துக் குடம் தண்ணி ஊத்தி, பத்துப் பூ பூத்துச்சாம்..." என்று பாடி முடித்ததும், கைகளைக் கோர்த்தப்படி நின்றிருக்கும் இருவரும் சட்டெனக் கைகளைக் கீழே இறக்குவார்கள். சங்கிலிபோல் வரும் குழந்தைகளுள் யார் அவர்களின் கைக்குள் வருகிறார்களோ, அவரை அப்படியே இரு கைகளுக்குள்ளும் இறுக்கி பிடித்துக்கொள்வார்கள்.
அப்படி மாட்டிக்கொண்ட குழந்தையை விடுவிக்க, எல்லாக் குழந்தைகளும் போய் கேட்பார்கள்.
மற்ற குழந்தைகள் : என் ஆட்டை ஏன் பிடிச்ச?
இரு குழந்தைகள் : எங்க பயிரில மேஞ்சது. அதனால பிடிச்சோம்!
மற்ற குழந்தைகள் : பணம் தர்றோம். விடுடா
இரு குழந்தைகள் : விட மாட்டோம் போடா.
மற்ற குழந்தைகள் : வானத்தையே வில்லா வளைச்சு தர்றோம். என் ஆட்டை விடு!
இரு குழந்தைகள் : நீ எது தந்தாலும் விட மாட்டோம் போ... - என்று மறுப்பார்கள்.
இருவரும் விட முடியாது என்றதும், கைகளுக்குள் சிக்கியிருக்கும் குழந்தை திமிறிக்கொண்டு வெளியே வர முயற்சிக்க வேண்டும். சில குழந்தைகள் வெளியே வந்துவிடுவார்கள். வர முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்ட குழந்தை, மற்ற இருவரும் தரும் 'செல்லமான தண்டனை"யை நிறைவேற்ற வேண்டும்.
அதாவது அவர்கள் பாடச் சொல்லும் பாட்டைப் பாட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் பாடும் ஏதாவதொரு பாடலுக்கு ஆட வேண்டும்.
பயன்கள் :
இவ்விளையாட்டு எண்களை கற்றுக் கொடுப்பதோடு, தோழமையையும் வளர்க்கும்.
குழந்தைகளின் அறிவு, திறமை, தைரியம், உடல், மனவலிமை, சுயமுயற்சி, தன்னம்பிக்கை, குழு ஒற்றுமை போன்ற பல்வேறு நல்லபண்புகளை வளர்க்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக