இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
நாமக்கல் மலைக்கோட்டை, வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இக்கோட்டை நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
மிகப்பெரிய ஒற்றை பாறையின் மலை உச்சியில் இந்த கோட்டை அமைந்துள்ளது.
மலையை செதுக்கி குடைவரை கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
இக்கோட்டை 246 அடி உயரம் கொண்டது. இந்த கோட்டையில் ஒரு கோவிலும், மசூதியும் உள்ளன. இவை இரண்டும் இந்நகரின் பிரபல சுற்றுலாத்தலங்களாக உள்ளன. தற்சமயம் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திப்பு சுல்தான் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்துப் போரிட இக்கோட்டையைப் பயன்படுத்தினார் என்று வரலாறு கூறுகிறது.
கோட்டைக்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை.
இங்குள்ள நரசிம்மர் கோவிலும், அரங்கநாதர் கோவிலும் மலையை குடைந்து செய்யப்பட்டவையாகும். மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும், மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளது.
கோட்டையின் வாயிற்கதவின் அருகில் ஒரு யாழியின் உருவம் வெளிச்சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது.
உள்ளே ஒரு பாசி படிந்த குளம் உள்ளது. சிறு நுழைவாயிலை கொண்ட பெரிய கற்சுவற்றையுடைய ஆயுதக்கிடங்கும் இருக்கிறது. கோட்டையிலுள்ள கர்ப்பகிரகத்தில் சிலையற்று ஒரு கோவிலும் உள்ளே இருக்கிறது.
நாமக்கலின் மலைக்கோட்டையில் இருந்து பார்த்தால் வண்ண வண்ண வீடுகளைச் சுமந்து நாமக்கல் நகரம் அழகாய் காட்சியளிக்கும். நாமக்கலில் உள்ள பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சென்று வரலாம்.
எப்படி செல்வது?
நாமக்கலில் இருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
விமானம் வழியாக :
சேலம் விமான நிலையம்.
திருச்சி சர்வதேச விமான நிலையம்.
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம்.
ரயில் வழியாக :
நாமக்கல் ரயில் நிலையம்.
செல்லும் நேரம் :
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
பார்க்க வேண்டிய இடங்கள் :
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.
நரசிம்மர் கோவில்.
நாமகிரி அம்மன் திருக்கோவில்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கொல்லிமலை.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்.
ஜேடர்பாளையம் தடுப்பணை.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக